தினமும் பால் குடிக்காமலே கால்சியம் சத்து முழுமையா கிடைக்கணுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க

First Published Feb 11, 2023, 12:20 PM IST

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான கால்சியம் சத்து கிடைக்கக் கூடிய உணவுகள் குறித்து காணலாம்.  


கால்சியம் சத்து குறைவாக இருந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, எலும்புகள் வலுவிழக்கின்றன. உங்களின் வயதுக்கு ஏற்ப இந்த பிரச்சனை தீவிரமாகும். நாள்தோறும் உணவில் கால்சியம் சத்து இருக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் சிலருக்கு பால் பொருள்கள்கள் உண்பது பிடிக்காது. அவர்கள் கால்சியம் சத்துள்ள எந்த உணவுகளை உண்ணலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

கால்சியம் நம் உடலுக்கு மிகவும் அவசியமானது. இதயத் துடிப்பு, தசைச் சுருக்கத்தை சீராக வைக்க உதவுகிறது. உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், ஹைபோகால்சீமியா மாதிரியான பிரச்சனைகள் வரும். அதன் அறிகுறிகளாக குழப்பம், தசை வலி, எலும்புகள் பலவீனம் ஆகியவை ஏற்படும். இந்த பிரச்சனையை தவிர்க்க நாள்தோறும் பால் பொருட்களை வேறு சில பொருட்களுடன் உண்பது நல்லது. 

சிலருக்கு பால், பால் சார்ந்த பொருட்கள் (Diary Products) சாப்பிட்டால் ஒவ்வாமை (Allergy) ஏற்படலாம். அவர்கள் அதற்கு பதிலாக சோயா பால் பயன்படுத்தலாம். சோயா பாலில் போதுமான அளவு கால்சியம் உள்ளது. சுவையை விரும்புபவர்கள் பாதாம் பாலையும் அருந்தலாம். 

நாம் உண்ணும் பச்சைக் காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இவை எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், போலேட், வைட்டமின் பி1, பி2, பி3, பி5 மற்றும் பி6 ஆகியவை உள்ளன. நாம் தினமும் காய்கறிகளை உண்பதால் எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

பருப்பு வகைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. பால் பொருட்கள் தவிர இவற்றை அதிகம் உட்கொள்ளலாம். இதில், புரதம், நார்ச்சத்து ஆகியவற்றுடன் கால்சியமும் கிடைக்கும். இவை நமது செரிமான அமைப்புக்கும் நல்லது. நமது ஆற்றலை அதிகமாக்கும். 

டோஃபு உணவுகளில் கால்சியம் நிறைந்துள்ளது. சுமார் 100 கிராம் டோஃபுவில் 176 மில்லிகிராம் கால்சியம் சத்து காணப்படுகிறது. இது சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இதை உட்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. 

பாதம்,பிஸ்தா உள்ளிட்ட விதைகளை உண்ணலாம். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் ஆகியவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது. 

click me!