Promise day: ஷாலினி சொல்லுக்கு கட்டுப்பட்டு 21 வருஷம் தாண்டி அஜித் காப்பாத்திட்டு வர்ற சத்தியம் பத்தி தெரியுமா

First Published | Feb 11, 2023, 9:52 AM IST

Promise day: காதலர் வாரத்தின் நான்காவது நாளான இன்று ப்ராமிஸ் தினம் (promise day) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் அஜித்- ஷாலினி காதலில் பெறப்பட்ட முக்கியமான சத்தியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 

உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாட மக்கள் எதிர்ப்பார்ப்போடு இருக்கின்றனர். காதலர் வாரத்தின் நான்காவது நாளான இன்று ப்ராமிஸ் தினம் (promise day). காதலர்கள் தங்களுக்குள் வாக்குறுதிகளை கொடுத்து அதை கடைபிடிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்த ப்ராமிஸ் தினத்தில் ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுப்பது உறவின் பொறுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இது மாதிரி நடிகர் அஜித், ஷாலினி காதல் கதையில் ஒரு வாக்குறுதி இப்போது வரை காப்பாற்றப்பட்டு வருகிறது தெரியுமா? பல ஆண்டுகள் ஆனபோதும் அஜித் அதை உறுதியாக காப்பாற்றி வருகிறார். அது குறித்து இங்கு காணலாம். 


அஜித், ஷாலினி ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோடி. உண்மையான அன்பு, காதல், தோழமைக்கு எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான 'அமர்க்களம்' படப்பிடிப்பின் போது காதல் பயணத்தைத் தொடங்கினர். அடுத்த ஆண்டே திருமணமும் செய்து கொண்டனர்.  

அஜித்-ஷாலினி காதல் மிகவும் ஆச்சர்யமூட்டக் கூடியது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் மனைவி ஷாலினிக்கு கொடுத்த வாக்குறுதியை நடிகர் அஜித் இப்போது வரை காப்பாற்றி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை. அவர் மனைவியையும், குடும்பத்தையும் அதிகம் நேசிப்பதே அந்த சத்தியத்தின் பின்னணி. 

தகவல்களின்படி, தன்னுடைய திருமணத்திற்கு முன்பு, ஷாலினி அஜித்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். "திருமணத்திற்குப் பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்யக் கூடாது, மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே படத்திற்கு செலவிட வேண்டும், மீதம் குடும்பத்திற்கான நாட்கள்" என அஜித்திடம் ஷாலினி கறாராக சத்தியம் வாங்கிவிட்டாராம். 

அஜித்திற்கும் குடும்பம் தான் முதலிடம். இப்போதுவரை அவர் அப்படிதான் இருக்கிறார். இந்த உண்மையை அஜித்தே தான் கடந்த காலத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். அண்மையில் கூட துணிவு பட வெற்றியை கொண்டாடும் விதமாக குடும்பத்தினருடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அஜித் எடுத்தப் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!