காலையில் வாக்கிங் போகும்போது கூட மாரடைப்பு வருமா? முன்கூட்டியே கண்டறிவது எப்படி?

First Published | Feb 11, 2023, 1:32 PM IST

நடைப்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் உதவுகின்றன. 

சிலர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது, ​​நடனம் ஆடும்போது, ​​நடக்கும்போது திடீரென சரிந்து விழுந்து இறக்கிறார்கள். இப்படி ஆக என்ன காரணம், நடக்கும் போது எப்படி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது? அதன் ஆபத்தை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது குறித்து இங்கு காணலாம். 

சிலர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவர். காலையில் நடப்பதும், ஓடுவதும் உடல் நலத்துக்கு நன்மை என்றாலும் சில நேரங்களில் மாரடைப்பு ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. நம்முடைய இதயத் தசைக்கான இரத்த ஓட்டம் திடீரென துண்டிக்கப்பட்டு இதய தசையை சேதப்படுத்தும் தீவிர நிலையை மாரடைப்பு என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என புதுடெல்லி வசந்த் குஞ்ச், லெப்டினன்ட் ராஜன் தால் மருத்துவமனையின் இருதயவியல் இயக்குநர் டாக்டர் தபன் கோஸிடம் கேட்டோம்.  

Latest Videos


நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சில அறிகுறிகள் ஏற்படும் போது கவனமாக இருக்க வேண்டும். மார்பு வலி, அதிகப்படியான மூச்சுத் திணறல் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிக்கு முரணான வியர்வை புறக்கணிக்க கூடாத அறிகுறிகள் ஆகும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போது அதிக இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், மார்பின் நடுப் பகுதியில் உள்ள தசைகளில் அசௌகரியம் ஏற்படலாம். வியர்வையுடன் இடது அல்லது வலது கை வலியும் வரலாம். இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடற்பயிற்சி செய்வதின் நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுவது அவசியம். 

சோர்வு, மூச்சுத் திணறல், தாடை, கழுத்து அல்லது மேல் முதுகில் வலி, கீழ் மார்பில் அழுத்தம் போன்றவை உடற்பயிற்சி செய்வதால் ஏற்படுகிறது என மக்கள் நினைத்துக் கொள்வதால் அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால் இவை மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாகவும் இருக்கலாம். 

மாரடைப்பு வராமல் இருக்க நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றை முறையாக கவனித்து கொள்ளுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். புகைபிடிப்பதை கட்டாயம் நிறுத்துங்கள். மாரடைப்பு உங்களை அண்டாது. 

click me!