உலகில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. ஆனாலும் உலகின் மிக ஆபத்தான சுருட்டை விரியன் உள்ளிட்ட ஐந்து விஷப் பாம்புகளைப் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பாம்பு என்றால் பயப்படாத மனிதர்களே கிடையாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று கூறுபவர்கள் கூட இந்த பாம்பை பார்த்தால் நடுங்குவார்கள். உலகில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சுமார் 15% முதல் 20% மட்டுமே விஷமுள்ளவை. இந்நிலையில் உலகின் டாப் 5 விஷப் பாம்புகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
26
இன்லேண்ட் தைப்பான்
உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் முதல் இடத்தில் இருப்பது இன்லேண்ட் தைப்பான் (Inland Taipan). இதை 'ஃபியர்ஸ் ஸ்னேக்' என்றும் அழைப்பார்கள். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. இதன் விஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரே கடியில் நூற்றுக்கணக்கானோரைக் கொல்லும் திறன் கொண்டது. ஆனால், ஆச்சரியமாக இது மனிதர்களை அரிதாகவே தாக்கும்.
36
ராஜ நாகம்
உலகிலேயே மிக நீளமான விஷப் பாம்பு ராஜ நாகம் (King Cobra) தான். இது முக்கியமாக இந்தியா மற்றும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுகிறது. ராஜ நாகத்தின் விஷம் நியூரோடாக்சிக் வகையைச் சேர்ந்தது. அதாவது, இது நரம்பு மண்டலத்தைத் தாக்கி, சுவாசத்தை நிறுத்திவிடும். தனது கூடு மற்றும் முட்டைகளைப் பாதுகாக்க இது மிகவும் ஆக்ரோஷமாக மாறும்.
அடுத்த ஆபத்தான பாம்பு பிளாக் மாம்பா (Black Mamba). இது ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. மிக வேகமாக நகரக்கூடிய பாம்புகளில் இதுவும் ஒன்று. இதன் விஷம் உடலில் மிக வேகமாகப் பரவும். சிகிச்சை தாமதமானால், சில மணி நேரங்களிலேயே உயிர் போய்விடும். தாக்கும்போது, பிளாக் மாம்பா அடுத்தடுத்து பலமுறை கடிக்கும். அதனால்தான் இது மிகவும் ஆபத்தான பாம்பாக பார்க்கப்படுகிறது.
56
சுருட்டை விரியன்
சுருட்டை விரியன் (Saw-scaled Viper) பாம்பு பார்க்கச் சிறியதாக இருந்தாலும், மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்று. இது இந்தியா உட்பட ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் விஷம் ரத்தம் உறைவதை நேரடியாகப் பாதிக்கும். கிராமப்புறங்களில் ஏற்படும் பெரும்பாலான பாம்புக்கடி மரணங்களுக்கு இந்த பாம்புதான் காரணம். சிறிய சத்தத்திற்குக் கூடத் தாக்கும் குணம் கொண்டது.
66
கண்ணாடி விரியன்
இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் கண்ணாடி விரியனும் (Russell's Viper) ஒன்று. இதன் கடி கடுமையான வலி, வீக்கம் மற்றும் உள் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த பாம்பால் ஆபத்து அதிகம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.