World Mental Health Day 2022: நம்முடைய மனநலத்தை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது..? இந்த நாளின் நோக்கம் என்ன..?

First Published Oct 10, 2022, 10:07 AM IST

World Mental Health Day 2022: உலக மனநல தினத்தைக் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கம், மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும், மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளை மேற்கொள்வதும் ஆகும்.

World Mental Health Day

உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு இந்த தினம் உலக மனநலக் (WFMH) கூட்டமைப்பால், முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. உலக மனநல தினத்தைக் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கம், மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும், மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளை மேற்கொள்வதும் ஆகும்.
 

World Mental Health Day

உலக சுகாதார நிறுவனம் கூற்றுப்படி, உலகளவில் எட்டு பேரில் ஒருவர் மனநலக் கோளாறுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

கடந்த இரண்டு ஆண்டுகளான ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, நம் அனைவருக்கும் தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, பதற்றம், பசியின்மை, வறுமை, ஏமாற்றம், விபத்து மற்றும் உளவியல் பிரச்சனைகளை வழங்கியுள்ளது. இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகி வருகிறது.மேலும் படிக்க...Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!

World Mental Health Day

எனவே, நாம் இனி வரும் நாட்களில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுவது அவசியமாகிறது. எதிர்வரும் சவால்களை தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.

அ தற்காக நாம் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே, நம்மை நாமே மகிழ்ச்சியூட்டும் செயல்களில் கட்டாயம் ஈடுபட வேண்டும். இருப்பினும், நாம் சில சமயங்களில் அதிகப்படியான மன உளைச்சலை உணரும்பட்சத்தில், அதற்கான மருத்துவ ஆலோசனைகளை நாடுவது அவசியமாகும்.

World Mental Health Day

மனச்சிதைவு நோய் இருந்தால் அறிகுறிகள்:

ஒருவருக்கு, மனச்சிதைவு நோய் இருந்தால் பேச்சு வித்தியாசமாக இருக்கலாம், எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாது. ஒருவருக்கு கவனமின்மை, ஞாபக மறதி போன்றவை இருந்தால் அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படலாம். 

 எந்த விதமான சின்ன விஷயமாகவே இருந்தாலும் பதற்றத்தோடும், பயத்தோடுமே அணுகினால் நிச்சயம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

World Mental Health Day

மனநலத்தை மேம்படுத்த செய்ய வேண்டியவை:

மனநலத்தை மேம்படுத்த, பிறருடன் மனம் விட்டு பேசுதல், தனக்கென நேரம் ஒதுக்குதல், மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல், இயற்கையோடு இணைந்திருத்தல் போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதால் மன நலம் மேம்படும்.

மேலும் படிக்க...Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!

World Mental Health Day

சமூக விஷயங்களுக்குக்காக உதவுவது மற்றும் சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியத்தைக் கூட்டுவதுடன் வாழ்நாளையும்  அதிகரிக்கிறது.

மனநல பிரச்னைகள் ஏற்படும்போதும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய பிரச்னைகளுக்கு மருந்தியல் சிகிச்சை, உளவியல் சிகிச்சை இரண்டுமே வழங்கப்படும்.

click me!