உங்க இதயம் ஆரோக்கியமா இருக்குதா? வீட்டிலயே இந்த சோதனைகள செய்து பாருங்க!

First Published | Sep 29, 2024, 2:55 PM IST

உலகம் முழுவதும் இருதய தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் வீட்டில் இருந்தபடியே இதயத்தின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்யும் வழிகளை அறிந்து கொள்வோம்.

World Heart day theme 2024

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் 7,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் மாரடைப்பு காரணமாக இறக்கின்றனர். இது ஏழு வெவ்வேறு காரணிகளால் ஏற்படலாம். இந்த பிரச்சினையை தீர்க்க, உலக இதய கூட்டமைப்பு உலக இதய தினத்தை கடைபிடிக்கிறது. இது ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று நடைபெறும் நிகழ்வாகும். இந்த குறிப்பிடத்தக்க நாள் மக்களுக்கு கல்வி கற்பதையும், இருதய நோய் (CVD) பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக அதன் எச்சரிக்கை அறிகுறிகள், அதைத் தடுக்க நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

World Heart day

ஒவ்வொரு ஆண்டும், உலக இதய தினம் இதய ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்த ஒரு குறிப்பிட்ட தீம் உள்ளது. 2024 ஆம் ஆண்டு உலக இதய தினத்திற்கான Oxymed இன் கருப்பொருள் "ABCD - Any Body Can Die", இது இதய நோயால் ஏற்படும் உலகளாவிய ஆபத்தின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. 

Tap to resize

Heart day

வயது, பாலினம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் இருதய நோய்கள் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்பதை இந்தத் தீம் எடுத்துக்காட்டுகிறது. மேலும், அனைத்து மக்களிடையேயும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் நடவடிக்கையின் அவசரத் தேவையை இது வலியுறுத்துகிறது.

world heart day

நாம் கருவாக உருவானது முதல் கல்லறைக்கு செல்லும் வரை ஓய்வின்றி உழைக்கும் ஒரு உறுப்பு இதயம் தான். அப்படிப்பட்ட இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு சமம். இருதய பிரச்சினைக்கு மருத்துவ நிபுணர்களை ஆலோசிப்பதே மிகவும் சிறந்தது. ஆனால், மருத்துவரை அணுகுவதற்கு முன்பாக நாமே சுயமாக பரிசோதனை செய்துகொள்ள முடியும். 

Heart Beat

உதாரணமாக உங்கள் வீடுகளில் உள்ள படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலமே உங்கள் இதயத்தின் பலத்தை அறிந்து கொள்ள முடியும். அதன்படி வீட்டில் உள்ள மாடி படிக்கட்டுகளில் சீரான வேகத்தில் ஏறும் போது உங்கள் இதய துடிப்பு லேசாக அதிகரிக்கும் பட்சத்தில் இதயம் இயல்பு நிலையில் இருப்பதாக உணரலாம். அதே சமயம் ஏறும் போது மார்பில் வலி ஏற்படுவது, அதிகமாக மூச்சு வாங்குவது, இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டால் உங்கள் இதயத்தில் சிக்கல் இருப்பதாக அர்த்தம்.

Smart Watch

நாம் ஓய்வாக இருக்கும் போது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆக்சிமீட்டர் அல்லது ஸ்மார்ட் வாட்ச் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதய துடிப்பை அறியலாம். நாம் எந்த வேலையும் செய்யாமல் மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் நேரத்தில் நல்ல இதய ஆரோக்கியம் கொண்ட நபருக்கு ஒரு நிமிடத்திற்கு 60 - 100 துடிப்புகள் வரை இதயம் துடிக்கும்.

Heart Problems

இயல்பாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்களை விட நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் நமது உணவில் பூண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை, மீன் வகைகள் உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம் இதயத்துடிப்பை சீராக வைத்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Latest Videos

click me!