செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) என்றால் என்ன?
இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிகளுக்கு, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ள ஒரு வாய்ப்புதான் இன் -விட்ரோ-பெர்டிலிசேஷன் (Invitro fertilization) எனப்படும் ஐவிஎப் ஆகும்.
ஐ.வி.எஃப் சிகிக்சை எவ்வாறு செயல்படும்..
பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணுக்களைத் தனித்தனியே பெற்று, அவற்றை இணைய வைத்து, பிறகு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகின்றனர். அந்தக் கரு வளர்ந்து, "டெஸ்ட் டியூப் பேபி" என்று சொல்லப்படும் ஐ.வி.எஃப் குழந்தையாகப் பிறக்கிறது.
உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபியாக கருவியலாளர் ஆடம் பர்ன்லி, பாட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோரது மேற்பார்வையில்,1978ம் ஆண்டு ஜூலை மாதம் லூயிஸ் பிரவுன் பிறந்தார். இந்தியாவில், முதல் ஐ.வி.எஃப் குழந்தை 1998 இல் ஆக்ராவில் பிறந்தது. அவருக்கு உத்சவ் என்று பெயர் வைக்கப்பட்டது.