இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம்:
இந்த 2022 ஆம் ஆண்டின், ஆடி மாதத்தில் அமாவாசை திதி ஜூலை 27ம் தேதி இரவு 10.06 மணிக்கு தொடங்குகிறது. எனவே, நம்முடைய முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் ஜூலை 28ம் தேதி வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மேலும், இந்த நேரத்தில் தான் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், நினைவில் கொள்ளவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது.