இந்த காலத்தில் பெண்களும் மது போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். தேசிய குடும்ப சுகாதர சர்வே அடிப்படையில் குடிப்பழக்கம் கொண்ட பெண்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் எவை என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஆண்கள் (53%) மற்றும் பெண்கள் (24%) மது அருந்துகிறார்கள். இந்த மாநிலத்தில்தான் அதிகம் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
பெண்கள் மது அருந்துவதில் சிக்கிம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநில பெண்களில் 16.2% பேர் மது அருந்துகின்றனர்.
அசாம் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அசாமில் உள்ள பெண்களில் 7.3% பேர் மது அருந்துவதாக NFHS-5 தரவுகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் மது வருவாய்க்கு ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 6.7% பெண்கள் மது அருந்துகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்திலும் குடிப்பழக்கம் கொண்ட பெண்கள் அதிகமாகவே உள்ளனர். ஜார்க்கண்ட் பெண்களில் 6% க்கும் அதிகமான பெண்கள் மது அருந்துகிறார்கள்.
சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் மது போதையில் ஊறிப்போன பெண்கள் உள்ளனர். அங்கு 5% பெண்கள் மது அருந்துகின்றனர்.
சத்தீஸ்கரிலும் மதுபானக் கடையைத் தேடிச் செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளனர். NFHS-5 தரவுகளின்படி, 4.9% பெண்கள் மது அருந்துகின்றனர்.