Almond Oil for Hair Growth
ஒவ்வொரு பெண்ணும் தனது கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பளபளப்பாக, கருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நூற்றுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட கூந்தல் இருக்கும். பலருக்கு பொடுகு, முடி உதிர்தல், வறண்ட முடி, முடி உடைதல், பலவீனமான முடி போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இதனால் முடி வளர்ச்சியும் நின்றுவிடுகிறது. வருடங்கள் உருண்டோடினாலும் முடி கொஞ்சம் கூட வளராது. காற்று மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை இதற்கு காரணம். ஆனால் பாதாம் எண்ணெயில் சிலவற்றை கலந்து தடவினால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். மேலும் முடி தொடர்பான பிரச்சனைகளும் குறையும். எனவே முடி வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது முடி தொடர்பான பல பிரச்சனைகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் கலந்து தடவவும். இதற்கு ஒரு கப்பில் உங்கள் கூந்தலுக்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும். இதில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தடவவும். இந்த கலவையை தலைக்கு தடவி 4 மணி நேரம் கழித்து குளித்தால் போதும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை கூட முடிக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உங்கள் கூந்தல் இயற்கையாகவே நீளமாக வளர வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் கறிவேப்பிலையை கலந்து தடவவும். இதற்கு அரை கப் எண்ணெயில் 7 முதல் 8 கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது இரண்டையும் கேஸ் அடுப்பில் சிறிது நேரம் சூடாக்கவும். பாதாம் எண்ணெயில் கறிவேப்பிலை சிறிது கருத்த பிறகு அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும். இப்போது இரவில் தலைக்கு எண்ணெய் தடவி, காலையில் குளிக்கவும்.
வெந்தயம்
வெந்தயம் மூலமும் முடி தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்கலாம். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் பாதாம் எண்ணெயை எடுத்து அதில் அரை டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெந்தயம் சிவக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெய் ஆறியதும் தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும். இந்த மூன்று வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றினால் நிச்சயம் உங்கள் முடி உதிர்தல் குறையும். உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.