இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் மிக்ஸி சீக்கிரத்தில் பழுதடைந்து விட்டது. அதற்காக அத்தனை விலை கொடுத்து வாங்கிய மிக்ஸி அப்படியே தூரப் போட்டு விட முடியுமா..? இந்த பழைய மிக்ஸியை புதியதாக மாற்ற தேவையான சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மிக்ஸியை எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்கு, தேவையான உதவி குறிப்புகள்.
மிக்ஸியை 2 சொட்டு திரவ சோப்பு ஊற்றி, பிரஸ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் மிக்ஸி எந்தவித வாசனையும் இன்றி பளபளப்பாக இருக்க உதவும். அப்படி செய்தால், மிக்ஸியில் இருக்கும் அழுக்குகள் மொத்தமான வந்து விடும்.
அடுத்ததாக, மிக்ஸியில் உள்ள ஜாரை சுத்தம் செய்வதற்கு நீங்கள் வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். மிக்ஸியில் மிகவும் கரையாக உள்ள இடத்தில் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையைத் தேய்க்கவும். பின்னர் வழக்கம் போல மிக்ஸியை சுத்தம் சுத்தம் செய்தால் எவ்வித துர்நாற்றமும் இன்றி மிக்ஸி ஜாரைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.