நெய்யின் மணம் மாறாமல் இருக்க..அரிசி, பருப்புகளில் வண்டு வராமல் இருக்க..இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

First Published Oct 7, 2022, 12:05 PM IST

Useful kitchen tips in Tamil: நம்முடைய வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் டென்ஷன் இல்லாமல் ஈசியாக சமைக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

நம்முடைய வீட்டில் நாம் அதிகம் பயன்படுத்தும் இடம் என்றால், அது சமையல் அறைதான். நாம் அன்றாடம் சமைப்பது மட்டும் சமையல் அறை வேலை அல்ல.  நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களையும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நாம் எப்போதும் ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படிப்பட்ட, சின்ன சின்ன சமையல் குறிப்புகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மேலும் படிக்க...நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் பொருட்களை.., இப்படி மீண்டும் புதுப்பித்து உபயோகிக்க சூப்பர் டிப்ஸ்..!

டிப்ஸ் 1

உங்கள் வீட்டில் அஞ்சறைப்பெட்டி பயன்பாடு இருந்தால், அதில் போட்டு வைக்கும் பொருள்கள் அதை திறந்து மூடுவதால் சில நாட்களில் நமத்து  போகும்.  இதை தடுக்க அதில் ஒரு காய்ந்த மிளகாய் காம்பினை ஒவ்வொரு கிண்ணத்திலும் போட்டு வைத்து விடுங்கள். பொருட்கள் வீணாகாமல் நீண்ட நாள் இருக்கும்.

உடைத்த கடலை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்தால் நமத்து போய்விடும். எனவே அதை வாணலியில் சூடேறும் பதத்தில் வறுத்து பின் டப்பாவில் அடைத்து வையுங்கள்.
 

டிப்ஸ் 2:

வீட்டில் நிச்சயமாக, தினமும் சமைக்கும் அரிசி அல்லது பச்சரிசி, இட்லி அரிசி , சிகப்பு அரிசி என எந்த அரியாக இருந்தாலும் அதில் வண்டு, புழு வருகிறது எனில் அதில் நான்கு அந்து பிரிஞ்சு இலைகளை போட்டு வையுங்கள். அவ்வாறு போட்டால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

டிப்ஸ் 3:

நெய் கெட்டுப் போகக் கூடாது அதேசமயம் அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்க வேண்டும் எனில் அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து வையுங்கள்.

டிப்ஸ் 4

புளியில் வண்டு பிடிக்கிறது எனில் அதில் கொட்டைகள் இருக்கலாம். எனவே கொட்டைகளை எடுத்துவிட்டு ஓடுகளை நீக்கி வைத்தால் வண்டு பிடிக்காது.

டிப்ஸ் 5:

அதே போல் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் சிறிது நாள் ஆனதும் அதில் சிக்கு வாடை வரும். அந்த வாடை வராமல் இருக்க சிறிதளவு மிளகை எண்ணெயில் போட்டு வைத்து விட்டால், சிக்கு வாடை வரவே வராது.

மேலும் படிக்க...நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் பொருட்களை.., இப்படி மீண்டும் புதுப்பித்து உபயோகிக்க சூப்பர் டிப்ஸ்..!

click me!