Winter Health Care : குளிர்ல கை, கால் விரைப்பு ஏற்படுதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணா உடனடி நிவாரணம்

Published : Nov 28, 2025, 04:38 PM IST

குளிர்காலத்தில் கைகால் விரைப்பு, வீக்கம், வறட்சி ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் சூப்பரான சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
16
Winter Health Care

குளிர்காலம் வந்தாலே கூடவே பல உடல்நல பிரச்சனைகளும் வந்துவிடும். குறிப்பாக சில பேருக்கு கையின் முன்பகுதி மற்றும் கால் பாதங்களில் வீக்கம் உண்டாகும். மேலும் அதிகப்படியான வறட்சி ஏற்படும். இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் இதேமாதிரி நிகழும். இந்த பிரச்சனைக்கு மருந்துகள் தடவியும் சரியாகவில்லை என்றால், கீழே சொல்லப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள். விரைவில் குணமாகும்.

26
சூடான நீரில் பாதங்களை வைத்தல்:

ஒரு பாத்திரத்தில் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து அதில் உங்களது பாதங்களை வைக்கவும். இப்படி செய்தால் வீக்கங்கள் மற்றும் கால் வலி குறையும். இதனால் நல்ல ரிலாக்ஸாக உணர்வீர்கள். படபடப்பு நீங்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்தால் போதும்.

36
உடலை நீரேற்றமாக வைத்தல் :

குளிர்காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்கவில்லை என்றாலும், கை கால் வீங்கும். பொதுவாகவே நம்ந் தண்ணீர் குறைவாக தான் குடிப்போம். அதுவும் குளிர்க்காலத்தில் சொல்லவே தேவையில்லை. நாம் குளிர்காலத்தில் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல் உடலில் தேங்கிவிடும். இதனால் தான் கை கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. எனவே, எந்த பருவத்திலும் உடலில் நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் குளிர் காலத்தில் தண்ணீர் அதிகமாகவே குடியுங்கள். அப்போதுதான் சருமம் வறட்சியாவது தடுக்கப்படும்.

46
பூண்டு சாப்பிட்டால்..

பூண்டு உணவில் சுவைக்காக மட்டுமல்ல உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் இது இரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுங்கள். பிறகு ஒரு கிளாஸ் சூடான நீர் குடிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களது உடலில் நல்ல மாற்றங்கள் நடக்கும்.

56
மிளகு சாப்பிடலாம் ;

மிளகு உடலை சூடாக்கி குளிர்காலத்தில் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மிளகை பொடியாக்கிய அதனுடன் சிறிதளவு கடுகு எண்ணெய் கலந்து அந்த பேஸ்ட்டை குளிரால் ஏற்பட்ட வீக்கம் உள்ள இடங்களில் தடவி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறைய ஆரம்பிக்கும். இதை தினமும் இரவு படுக்கும் முன் செய்ய வேண்டும்.

66
இஞ்சி டீ :

குளிர்காலத்தில் நீங்கள் வழக்கமான டீக்கு பதிலாக இஞ்சி டீ குடியுங்கள். இது சளி, இருமல், தொண்டை புண், தொண்டை வலி ஆகியவற்றை குணமாக்கும். மேலும் இஞ்சியில் இருக்கும் பண்புகள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால் உடலில் வீக்கங்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே குடிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories