
பணம் என்பது மனிதர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படை தேவையாக உள்ளது. ஒருவரால் பணம் இல்லாமல் வாழ முடியும். ஆனால் பணம் இல்லாமல் நிம்மதியாக சாகக் கூட முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை. பணத்தை ஈட்டுவது தான் இங்கே வாழ ஒரே வழி.
இப்படி சம்பாதிக்கும் பணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கையாளுவார்கள். சிலர் பணத்தை எண்ணும் போது எச்சில் தொட்டு ஒவ்வொரு நோட்டாக எண்ணுவார்கள். வங்கிகளில் பணத்தை மொத்தமாக எடுத்தவர்கள் பணத்தை எண்ணுவதை கவனித்தீர்களென்றால் நிச்சயம் கையில் உமிழ் நீர் சுவடு இருக்கும். ஏனெனில் வாயில் எச்சிலை தொட்டுதான் பணத்தை எண்ணியிருப்பார்கள்.
இதையும் படிங்க: காலை எழுந்தவுடன் தெரியாமல் கூட இந்த 5 விஷயங்களை பண்ணாதீங்க!! மீறி செய்தால் விளைவு மோசம்..
அது மட்டுமல்ல, சிலர் புத்தகங்களை புரட்டும்போது எச்சில் தொட்டு தான் பக்கங்களை புரட்டுவார்கள். சில நடத்துனர்கள் பயணச்சீட்டு கிழித்து கொடுக்கும் போது எச்சில் தொட்டு தான் கிழிப்பார்கள். நிறைய இடங்களில் பாலிதீன் பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுக்க எச்சிலைதான் தொடுவார்கள். அதை போல காகிதங்களை எடுக்கவும் வாயில் உள்ள உமிழ் நீரான எச்சில் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்படி செய்வது தவறு என கொரோனா காலகட்டத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா போன்ற தொற்று நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் கொஞ்ச காலம் எச்சில் தொட்டு பணம் என்பதை தவிர்த்து இருந்தாலும் சமீப காலங்களில் சிலர் இதை செய்வதை காண முடிகிறது. ஏன் ஒருவர் எச்சில் தொட்டு பணத்தை கையாளக்கூடாது என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? உடனே நிறுத்துங்க.. இல்லைன்னா அவ்வளவுதான்..!
இந்து சாஸ்திரங்களிலும் பணத்தை எச்சில் தொட்டு எண்ணக் கூடாது என்பதற்கு ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்கள். அதாவது பணத்தை எண்ணும்போது எச்சிலை பயன்படுத்தினால் வாஸ்து படி தவறு. இப்படி செய்வதால் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை அவமதிப்பது போலாகும். இப்படி செய்பவர்கள் கையில் பணம் தங்காதாம். அவர்களுடைய வாழ்நாள் எல்லாம் பண நெருக்கடியில் தான் இருக்குமாம்.
பணத்தை எச்சில் தொட்டு எண்ணக் கூடாது என்பதற்கு அறிவியல்ரீதியாக காரணம் உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பணம் கோடிக்கணக்கானோர் கைகளில் வலம் வந்தது. இப்படி பலரின் கைகளில் இருந்து மாறி வந்திருக்கும் ரூபாய் நோட்டுகளின் மீது பொது கழிப்பறையின் கதவை காட்டிலும் அதிக கிருமிகள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆகவே அவற்றை எண்ணும் போது விரலை எச்சிலால் நனைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
ரூபாய் நோட்டின் மேற்புறத்தில் காணப்படும் சில கிருமிகள் விரல்களில் ஒட்டினாலும் அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய தீங்கு ஏற்படுவதில்லை. ஆனால் சிலர் பணத்தை எண்ணிவிட்டு மீண்டும் மீண்டும் வாயில் கையில் வைப்பார்கள். இவர்களில் சிலருக்கு வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஏனெனில் ரூபாய் நோட்டுகளில் ஒட்டியுள்ள குறிப்பிட்ட வகை பாக்டீரியா இந்த பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சிலருக்கு சரும நோய்கள் ஏற்படலாம். ஆகவே தான் பணத்தை கணக்கிடும் போது விரலால் எச்சிலை தொட்டு எண்ணவேண்டாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பணத்தை எண்ணிய பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். ஒருவேளை நீங்கள் பணம்
எண்ணிய பின்னர் கைகளை நன்கு கழுவவில்லை என்றால், கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
சுகாதாரம்:
பணம் என்பது வெறும் காகிதம் அல்ல. அது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா, வைரஸ்கள் மேலும் சில நுண்ணுயிரிகளை பரவக் கூடிய ஊடகம். அதனை தொடும்போது உங்கள் விரலை வாயில் வைப்பதால் உங்களுக்கு நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
அழுக்கு:
ரூபாய் நோட்டுகள் அழுக்கு, தூசி போன்ற அசுத்தங்களை கண்டவை. அதனை எண்ணும்போது வாயில் விரல் வைத்தால் அந்த அழுக்கு நமக்குள் செல்லும் அபாயம் உள்ளது.
ரசாயனங்கள்:
சில ரூபாய் நோட்டுகளில் அச்சிட்ட மை அல்லது பாதுகாப்புக்காக பூசப்பட்ட இரசாயனங்களின் சுவடு இருக்கலாம். அதை தெரியாமல் நாம் உட்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.
உமிழ்நீர் சேதம்:
பணத்தை வாயில் உள்ள உமிழ்நீரால் எண்ணும்போது அது சேதமாகலாம். கொஞ்சம் பழைய நோட்டாக இருந்தால் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது. அதனை அதன் பிறகு பயன்படுத்த முடியாது.
தொழில்முறை:
பணத்திற்கு என்று ஒரு மரியாதை உள்ளது. பணத்தை எண்ணும் போது எச்சில் தொட்டு பணத்தை தொடுவது தொழில்சார்ந்த நடவடிக்கை அல்ல. இதனால் வாடிக்கையாளர்கள் முன்பு அல்லது சக தொழில்முனைவோர் முன்பு உங்கள் தரம் தாழ்ந்து போகலாம். சுத்தமில்லாத நடவடிக்கையாக இருக்கும்.
பணத்தை எண்ணுவதற்கு எச்சிலுக்கு பதிலாக, இதைப் பயன்படுத்தலாம்..
நீங்கள் பணத்தை எண்ணுவதற்கு ஈரமான விரல்களுக்கு பதிலாக உலர்ந்த விரல்களை பயன்படுத்தி எண்ணலாம். வெறும் கையால் பணத்தை எண்ணாமல் கையுறைகளை அணிந்து கொள்ளலாம். ஒருநாளில் அதிகமாக பணம் வரவு செலவு செய்பவர்கள் கையுறை அணியலாம். வியாரம் செய்யும் இடங்களில் பணம் எண்ணும் இயந்திரங்களை பயன்படுத்தலாம். வெட் டிஷ்யூ (wet tissue) எனும் ஈரமான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தலாம். நீங்கள் பணத்தை எண்ணும்போது சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம். குறிப்பாக தொழில்முறை அமைப்புகள் நல்ல சுகாதாரத்தை பேணுவது மற்றும் பணத்தை முறையாக கையாள்வது முக்கியம்.