Washing Eggs: முட்டையை கழுவாம சமைக்கிறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published : Jun 16, 2026, 03:17 PM IST

முட்டையை சமைக்கிறதுக்கு முன்னாடி கழுவுறது ரொம்ப முக்கியம். ஆனா நம்மில் பலரும் இதை கண்டுக்கிறதே இல்லை. முட்டையை கழுவாம சமைச்சா என்னென்ன பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

PREV
16
என்னென்ன பிரச்சினைகள் வரும்?

நிறைய பேர் தினமும் முட்டை சாப்பிடுறாங்க. ஆம்லெட், அவிச்ச முட்டைனு எப்படி செஞ்சாலும் டேஸ்டா இருக்கும். ஆனா, முட்டையை கழுவாம அப்படியே பொரிக்கிறதாலயோ, வேக வைக்கிறதாலயோ என்ன ஆகும்னு யோசிச்சிருக்கீங்களா? முட்டை சுத்தம் ரொம்ப முக்கியம்னாலும், நாம அதை பெருசா கண்டுக்கிறதில்லை.  ஆனா அதனால் நிறைய உடல்நல பிரச்சினைகள் வருமுன்னு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

26
சுத்தம் செய்யப்பட்டிருக்காது
பேக் செய்யப்பட்ட அல்லது கடைகளில் வாங்குற முட்டைகள் பொதுவா சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனா, உள்ளூர் சந்தைகள்ல வாங்குற முட்டைகள் நேரடியா பண்ணைகளில் இருந்து வருது. அதனால, அதை சுத்தம் செய்யாம, கிருமி நீக்கம் செய்யாம அப்படியே விற்பனை செய்றாங்க.
36
வயிற்று வலி, வாந்தி மற்றும் ஃபுட் பாய்சன்
இந்த முட்டைகளோட ஓடுகள்ல அழுக்கு, தூசி, கோழி இறகுகள், ஏன் கோழியோட எச்சம் கூட இருக்கலாம். இந்த அசுத்தங்கள் சால்மோனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியாக்களை நம்ம சமையலறைக்கு கொண்டு வந்துடும். இதனால, வயிற்று வலி, வாந்தி, ஃபுட் பாய்சன் கூட ஏற்படலாம்.
46
சமைக்கும் முன் கழுவவும்

உள்ளூர் கடைகள்ல வாங்குற முட்டைகளை சமைக்கிறதுக்கு முன்னாடி கண்டிப்பா கழுவணும்னு டாக்டர்கள் சொல்றாங்க. ஏன்னா, இந்த முட்டைகள் பெரும்பாலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்காது. முட்டை ஓடுகள் பார்க்க கடினமா இருந்தாலும், அதுல சின்ன சின்ன துளைகள் இருக்கும். இதனால, முட்டை ஓடு அழுக்கா இருந்தா, பாக்டீரியாக்கள் சுலபமா உள்ளே போய்டும்.

56
கழுவுவது சிறந்த வழி
முட்டைகளை சுத்தம் செய்ய, குளிர்ந்த நீருக்கு அடியில நல்லா கழுவுங்க. ஓடு உடையாம மெதுவா கழுவணும். கழுவுனதுக்கு அப்புறம், காய்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பரால துடைச்சு எடுங்க. அதேபோல, முட்டைகளை ரொம்ப நாள் ஃபிரிட்ஜ்ல வைக்காதீங்க. ஏன்னா, அது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சமைக்கிறதுக்கு முன்னாடி முட்டையை கழுவுறதுதான் சிறந்த வழி.
66
தொற்றுநோய் அபாயம் அதிகம்
சூப்பர் மார்க்கெட்டுகள்ல பேக் செஞ்சு விற்கப்படுற முட்டைகள், தரப் பரிசோதனை, சுத்தம் செய்தல்னு பலகட்ட செயல்முறைக்கு அப்புறம்தான் வருது. பாக்டீரியா வளராம இருக்க, கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில அதை சேமிப்பாங்க. ஆனா, உள்ளூர் முட்டைகள் ஃப்ரெஷ்ஷா இருந்தாலும், பெரும்பாலும் கழுவாம, திறந்தவெளியிலதான் வைக்கப்பட்டிருக்கும். இதனால தொற்றுநோய் அபாயம் அதிகமாகுது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories