Lawyer: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற அங்கி அணிகிறார்கள் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்.!

Published : Aug 01, 2026, 11:56 AM IST

Why Judges and Lawyers Wear Black Coats: நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கருப்பு நிற அங்கிகளையே அணிகின்றனர். அதற்குப் பின்னால் உள்ள நீண்ட வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

PREV
15
Why Judges and Lawyers Wear Black Coats

நம் நாட்டில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பிற நிற அங்கிகளை அணிவதற்குப் பதிலாக கருப்பு நிற அங்கிகளையையே அணிகின்றனர். இதுகுறித்து என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? இதன் பின்னால் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணியும், ஆழமான காரணங்களும் உள்ளன. இது வெறும் சீருடை மட்டுமல்ல, நீதித்துறை, கம்பீரம் மற்றும் சமத்துவத்தின் அடையாளம். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கருப்பு நிற அங்கியை அணிவதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

25
இரண்டாம் மேரியின் மறைவு

1694 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் மேரி காலமானபோது மன்னர் மூன்றாம் வில்லியம் மற்றும் நீதிமன்ற உறுப்பினர்கள் அனைவரும் துக்கம் அனுசரிப்பதற்காக கருப்பு நிற அங்கி அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. துக்க அனுசரிப்பு முடிந்த பிறகு இந்த உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் அது ஒரு வழக்கமாகவும், பாரம்பரியமாகவும் மாறிப்போனது. அந்த உடையின் கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கடைபிடிக்கவே வழக்கறிஞர்கள் தொடர்ந்து கருப்பு நிற அங்கியை அணியத் தொடங்கினர். பின்னர் 1697 ஆம் ஆண்டு இது சட்டபூர்வ சீருடையாக மாறியது.

இதையும் படியுங்கள் - பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

35
சட்டத்தின் முன் அனைவரும் சமம்

நீதிமன்றத்தில் ஏழை, பணக்காரன், சாதி, மதம், நிறம் என எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. எந்த ஒரு உணர்ச்சியையும் அல்லது ஒருதலைச் சார்பையும் காட்டாத நிறமாக கருப்பு நிறம் கருதப்படுகிறது. கருப்பு நிறம் எந்த ஒரு தனிப்பட்ட பக்கத்தையும் சாய்ந்து கொள்ளாத அமைதியான மற்றும் கம்பீரமான நிறமாக கருதப்படுகிறது. இது ஒரு நடுநிலை நிறமாக இருப்பதாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதே இந்த சீருடையின் முதன்மை நோக்கமாகும். ஒரு வழக்கறிஞர் தங்களின் ஆடம்பரமான ஆடைகள் அல்லது சமூக அந்தஸ்தை காட்டிக் கொள்ளக் கூடாது, கருப்பு அங்கியை அணிவதன் மூலம் நீதிமன்றத்தில் அனைவரும் சமம் என்கிற ஒரே அடையாளத்தைக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படியுங்கள் - வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

45
கருப்பு நிறத்தின் கம்பீரமும், நேர்மையும்

கருப்பு நிறம் என்பது கண்ணியம், அதிகாரம், கடமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் கருப்பு நிற அங்கியை அணியும் பொழுது அவரது தனிப்பட்ட வெறுப்பு விருப்பங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறது. தன் சுய விருப்பங்களை ஒதுக்கி விட்டு அவர் நீதியை நிலைநாட்டும் பொறுப்பை முழுமையாக ஏற்கிறார் என்பதை அது குறிக்கிறது. நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதை போலவே நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நீதி வழங்கும் பொழுதோ அல்லது வாதாடும் பொழுதோ சம்பந்தப்பட்ட நபரின் நிறம், ஜாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றை பார்க்கக்கூடாது. சட்டத்தின் பார்வைக்கு அனைவரும் ஒன்றே என்பதை இந்த அங்கி பிரதிபலிக்கிறது.

இதையும் படியுங்கள் - கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

55
கருப்பு அங்கியுடன் வெள்ளை நெக் பேண்ட்

இந்தியாவில் தற்போதைய சட்ட முறைகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை தான். 1961 ஆம் ஆண்டு இந்திய வழக்கறிஞர்கள் சட்டத்தின் படி இந்தியாவில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு வரும்பொழுது கருப்பு நிற அங்கி மற்றும் வெள்ளை நிற நெக் பேண்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. கருப்பு நிற அங்கியுடன் கூடுதலாக கழுத்தில் அணியும் அந்த வெள்ளை நிற பேண்ட் சுத்தமான மனசாட்சி மற்றும் நேர்மையை குறிக்கிறது. மேலும் வேத ஆகம கதைகளின் படி வெள்ளை நிறம் என்பது நம்பிக்கையின் சட்டப் பலகைகளை குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories