இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..?
1. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம். இதற்கு நீங்கள் நெய், பால், மாமிஸ வகை உணவுகள், பருப்புகள், தானியங்கள் போன்றவை நிறைத்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
2. நரம்புகளை பலவீனப்படுத்தும் வாயுவின் குணங்களை மாற்றி அமைத்து வலுவைக் கூட்டும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளாகிய, தாடிமாதி கிருதம், இந்துகாந்தம் கிருதம், விதார்யாதி கிருதம், கல்யாணக கிருதம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி, சிறிய அளவில் காலை, மதியம், இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் தரும்.