உடைந்த கண்ணாடி:
நம் வீட்டில் உடைந்த கண்ணாடி வைத்திருக்க கூடாது. இவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும். முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அது வீட்டில் வைத்திருப்பது அவ்வளவு நல்லது அல்ல. அதேபோன்று, பூஜை அறை, சமையல் அறை, வீட்டின் ஜன்னல் கதவுகள் உள்ளிட்ட எந்த இடத்தில் உடைந்த கண்ணாடி அல்லது விரிசல் இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும். எனவே, கண்ணாடி எந்த வகையில் உடைந்து வீட்டில் இருந்தாலும் அதனை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதேபோன்று, உடைந்த கண்ணாடி வளையல்கள் கூட பெண்கள் கையில் அணிந்து இருக்கக் கூடாது.