Aadi Month: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? அம்மன் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிக

Published : Jul 13, 2022, 11:32 AM IST

Aadi Month 2022: இந்த மாதத்தில்தான் கிரகங்களின் அரசனான சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. 

PREV
16
Aadi Month: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? அம்மன் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிக
Aadi Month 2022

ஆடி வெள்ளி:

இந்த ஆடி மாதம் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த, ஆடி மாதத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடி பிறந்த முதல் நாளில், வீட்டில் வேண்டிய இறைச்சி எடுத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளி வரும், ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களின், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடி மாதம் முழுவதும், அம்மன் மாதம் என்பதால், சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். 

மேலும் படிக்க....Aadi Month 2022 Rasi Palan: ஆடி மாதத்தை ஒட்டி நிகழ்ந்த சூரியன் பெயர்ச்சி....கஜகேசரி யோகம் பெறவுள்ள 4 ராசிகள்..

26
Aadi Month 2022

எனவே, இந்த நாட்களில் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அம்மன் அள்ளி தருகிறார். இந்த நாட்களில், வழிபடும் பக்தர்களுக்கு அம்மன் வேறு எந்த மாதத்திலும் கிடைக்காத வரத்தை அள்ளி தெளிக்கிறார். குறிப்பாக, நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமண தடை நீங்கும். தொழிலில் வெற்றி தேடி வரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கும். மொத்தத்தில், இந்த மாதத்தில் தொட்டது எல்லாம் பக்தர்களுக்கு வெற்றியாக அமையும்.

36
Aadi Month 2022

ஆடி 18:

அதே போன்று, ஆடி 18 அன்று மங்களத்தின் அடையாளமாக விசேஷமான நாளாக கருதப்படும் இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள், தாலி என்றழைக்கப்படும் மஞ்சள் கயிற்றை கணவர் கையால் மாற்றுகின்றனர். இந்த நாட்களில் தாலி பெருக்கி போடும் போது, நீண்ட நாட்களாக பெண்கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும் வாழ வேண்டும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க....Aadi Month 2022 Rasi Palan: ஆடி மாதத்தை ஒட்டி நிகழ்ந்த சூரியன் பெயர்ச்சி....கஜகேசரி யோகம் பெறவுள்ள 4 ராசிகள்..

46
Aadi Month 2022

 
நம்முடைய முன்னோர்கள் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. இந்த விரதம்  கணவனின் ஆயுளை நீடிக்கவும்,  குழந்தை வரம் பெறவும். குடும்பத்தில் மகிழ்ச்சி  பொங்கவும் செய்கிறது . 

56
Aadi Month 2022

ஆடி அமாவாசை ஜூலை 28:

ஆடி மாதத்தில் வரும் மற்றுமொரு முக்கிய தினம் ஆடி அமாவாசை ஆகும். நம்முடைய முனோர்கள் கூற்றுப்படி, ஆடி அமாவாசை அன்று சமுத்திரக் கரைகளிலும் நதிக்கரைகளிலும் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் உண்டு.  இந்த மாதம் ஆடி அம்மாவாசை ஜூலை 28 ல் வருகிறது. சரியாக ஜூலை 27, 2022ல் 10:05 PM மணிக்கு துவங்குகிறது. 

மேலும் படிக்க....Aadi Month 2022 Rasi Palan: ஆடி மாதத்தை ஒட்டி நிகழ்ந்த சூரியன் பெயர்ச்சி....கஜகேசரி யோகம் பெறவுள்ள 4 ராசிகள்..

66
Aadi Month 2022

ஜூலை 28, 2022  பிற்பகல் 11:55  PM மணிக்கு முடிவடைகிறது. இந்த நாட்களில் மறைந்து போன நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு சரியான காலமாகும். ஆடி அமாவாசை நாளில் விரமிருந்து, நீர் நிலைகள், ஆறு, குளம் போன்றவற்றில் நீராடி காக்கைகளுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறும் சிறப்பான நாளாகும். 
 

click me!

Recommended Stories