Funeral Rituals : இந்து இறுதிச் சடங்கில் பானையை உடைப்பது, உடல் நீரின் தத்துவத்தால் ஆனது என்பதைக் குறிக்கிறது. உயிர் பிரிந்ததும் உடல் மண்ணுடன் மண்ணாகப் போவதையும், ஆன்மா பயணமாவதையும் இது உணர்த்துகிறது.
இந்து மதத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பல சடங்குகள் உள்ளன. அவற்றில் இறுதியாகச் செய்யப்படுவது 'அந்த்யேஷ்டி' எனப்படும் இறுதிச் சடங்காகும். இறந்த உடலுக்குப் பிரியாவிடை அளிக்கும் இச்சடங்கில், அவரது மகன் அல்லது நெருங்கிய உறவினர் சிதைக்குத் தீ மூட்டுவர்; இது 'முகாக்னி' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பாக, தண்ணீர் நிறைந்த பானையைத் தூக்கிக்கொண்டு சிதையைச் சுற்றி வருவது ஒரு முக்கியமான வழக்கமாகும்.
இறுதிச் சடங்குல, ஒரு மண்பானையில தண்ணி நிரப்பி, அதுல சின்னதா ஓட்டை போடுவாங்க. அந்தப் பானையை தூக்கிக்கிட்டு, சிதையை இடது பக்கமா (அப்ரதக்ஷிணமா) சுத்தி வருவாங்க. மத்த நல்ல காரியங்களுக்கு வலது பக்கமா சுத்துறது வழக்கம். ஆனா, இது துக்க நிகழ்வுங்கிறதால, இப்படி மாத்தி செய்றாங்க. சுத்தி வரும்போது, பானையில இருந்து தண்ணி கொஞ்சம் கொஞ்சமா வெளியேறும். கடைசியா, அந்தப் பானையை கீழ போட்டு உடைச்சிடுவாங்க.
இந்து தத்துவப்படி, நம்ம உடம்பு ஒரு மண்பானை மாதிரி தற்காலிகமானது. ஆனா, உள்ள இருக்குற ஆத்மா நிரந்தரமானது. இந்த பானைதான் நம்ம உடம்பு. அதுக்குள்ள இருக்குற தண்ணிதான் உயிர் அல்லது ஆத்மா. பானையில ஓட்டை போட்டு தண்ணி வெளியேறுறது, உடலை விட்டு ஆத்மா பிரியுறத குறிக்குது. அதாவது, இந்த உடலோட பந்தம் முடிவுக்கு வருதுன்னு சொல்றாங்க.
பானையை உடைக்கிறதுதான் இந்த சடங்கோட முக்கியமான கட்டம். மண்பானை உடம்போட குறியீடுன்னா, அதை உடைக்கிறது, இந்த உலகத்துல உடலோட பயணம் முடிஞ்சிருச்சுன்னு காட்டுது. 'இந்த உடலோட உன்னோட பந்தம் முடிஞ்சது, இனி உன் பயணம் வேற'ன்னு ஆத்மாவுக்கு சொல்ற ஒரு தத்துவ செய்தியை இது காட்டுது. உடம்பு அழிஞ்சாலும் ஆத்மாவுக்கு அழிவில்லைங்கிற இந்து மத நம்பிக்கையை இதுல பார்க்கலாம்.
சில பகுதிகள்ல, 'திம்புடு கள்ளெம்' மாதிரி சில உள்ளூர் சடங்குகளையும் செய்வாங்க. இறந்தவங்களுக்கு வீடு, குடும்பம் மேல இருக்குற பந்தத்தை பிரிக்கிறதுதான் இந்த சடங்குகளோட நோக்கம்னு பெரியவங்க சொல்றாங்க. மொத்தத்துல, மண்பானையை உடைக்கிறது வெறும் சடங்கு மட்டும் இல்ல. நம்ம உடம்பு நிரந்தரம் இல்லைங்கிறதை உணர்த்தவும், இறந்தவரோட ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கவும் இதை செய்றாங்க. அதனாலதான், இந்த சடங்குல ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ஆழமான அர்த்தம் இருக்கு.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.