விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளில், பலரது சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருக்கும். இப்படி தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களையும், குறியீடுகளும் இருக்கும். ஆனால் சட்டைகளின் பின் பகுதியை மட்டும் ஏன் கிழித்து தொங்க விட்டுள்ளனர்? அதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? என்று உங்களுக்கு தெரியுமா?
பைலட்களுடைய சட்டையின் பின் பகுதியை கிழித்து தொங்க விடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மாறாக மாணவர்களாக இருந்து பைலட்களாக உருவெடுப்பவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் பாரம்பரியமான நடவடிக்கையாக இந்த நடைமுறை செய்யப்படுகிறது. ஆம்.. பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்னர், அவர்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும். இந்த மாணவர்களின் சட்டையின் பின் பகுதியை, அவரது வழிகாட்டிதான் கிழிப்பார்.