5. உடல் வெப்பம் மற்றும் ஆல்கஹால்
உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர்களையும், அதிகமாக வியர்ப்பவர்களையும் கொசுக்கள் விரைவாக அடையாளம் காண்கின்றன. பீர் அல்லது ஆல்கஹால் அருந்துபவர்களை கொசுக்கள் அதிகமாகக் கடிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் அதிகரிப்பதும், வியர்வை வாசனை மாறுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆய்வுகள் சொல்வது என்ன?
மேலே குறிப்பிட்டுள்ள இரத்த வகை, கார்பன் டை ஆக்சைடு, வியர்வை, ஆடைகளின் நிறம் மற்றும் உடல் வெப்பம் ஆகியவற்றைத் தவிர, தோலில் வாழும் நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பும் கொசுக்களை ஈர்ப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மனிதர்களின் தோலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.
ஆனால், ஒவ்வொரு நபரின் தோலிலும் உள்ள பாக்டீரியாக்களின் வகைகளும் அதன் எண்ணிக்கையும் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான அதிக அளவிலான பாக்டீரியாக்களை விட, தோலில் பலதரப்பட்ட பாக்டீரியாக்களின் கலவை குறைவாகவும், குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் அதிகமாகவும் இருக்கும் நபர்களைக் கொசுக்கள் மிக எளிதாகக் கண்டறிந்து கடிக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.