குளிர்பான பாட்டில்களின் அடிப்பகுதி ஏன் தட்டையாக இல்லை? இதுதான் சீக்ரெட்!

First Published | Oct 16, 2024, 12:24 PM IST

குளிர்பான பாட்டில்களின் அடிப்பகுதி ஏன் தட்டையாக இருப்பதில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் தாகத்தைத் தீர்க்கும் குளிர்பானங்களை நாம் அனைவரும் விரும்புகிறோம், குறிப்பாக சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பலரும் குளிர்பானங்களை விரும்பி குடிக்கின்றன. உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் குளிர்பானங்களும் ஒன்றாகும். பார்ட்டிகள், கொண்டாட்டங்களில் இந்த குளிர்பானங்கள் பிரதானமையாக உள்ளன. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் மத்தியில் மிகவும் பிடித்தமானவையாகவும் குளிர்பானங்கள் இருக்கின்றன.

நீங்கள் ஒரு மால் அல்லது மளிகைக் கடையில் ஷாப்பிங் சென்றாலும், நீங்கள் பல குளிர்பான பாட்டில்களைப் பார்த்திருக்க பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பாட்டில்களின் அடிப்பகுதி ஏன் தட்டையாக இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா?

பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களின் அடிப்பகுதி எப்போதும் ஸ்பைக் ஸ்டைலில் இருக்கும். அதேசமயம் தண்ணீர் பாட்டிலை வாங்கினால், அதன் அடிப்பகுதி எப்போதும் தட்டையாக இருக்கும். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன தெரியுமா? இதுகுறித்து பார்க்கலாம் .

உடலை குளிர்விக்க பல நூற்றாண்டுகளாக மோர், எலுமிச்சை போன்ற பானங்களை குடித்து வருகின்றனர். ஆனால் குளிர் பானங்களின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் தேன் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் லெமனேட், முதலில் சந்தைப்படுத்தப்பட்ட குளிர்பானமாகும்.

குழந்தைங்க தினமும் 'பூண்டு பால்' குடித்தால் மழைகாலத்துல சளி தொந்தரவே இருக்காதாம் தெரியுமா?

Tap to resize

Cool drinks summer

1676 ஆம் ஆண்டில், பிரெஞ்சு நிறுவனமான, பாரிஸில் உள்ள Compagnie de Limonadiers, எலுமிச்சைப் பழத்தை விற்க ஏகபோக உரிமையைப் பெற்றது. 17 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் இயற்கையாகவே கார்பனேற்றப்பட்ட நீரூற்று நீரைப் பின்பற்ற முயன்றனர். 1780 ஆம் ஆண்டில், ஜெனிவாவில் ஜோஹன் ஜேக்கப் ஸ்வெப்பே தண்ணீரை கைமுறையாக கார்பனேட் செய்யும் செயல்முறையை உருவாக்கினார்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களின் வளர்ச்சி ஒரு அற்புதமான யோசனையாக இருந்தது, இது கடைகளிலும் வீடுகளிலும் பொதுவான காட்சியாக இருந்தது.

குளிர்பான பாட்டிலின் தனித்துவமான வடிவம் மற்றும் வடிவமைப்பு அதன் பிராண்ட் அடையாளத்தின் முக்கிய பகுதியாகும். ஆனால் குளிர்பான பாட்டிலின் அடிப்பகுதியில், ​​ஸ்பைக்-ஸ்டைல் ​​என்பது ஒரு ஸ்டைல் ​​மட்டுமல்ல; அதன் பின்னால் வடிவமைப்பு அறிவியல் உள்ளது.

குளிர்பானங்களில் உள்ள வாயுதான் இதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குளிர்பானங்களில் உள்ள அழுத்தம், தட்டையான அடிப்பகுதியுடன் கூடிய பாட்டில்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. அத்தகைய வடிவமைப்பிற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்றால், ஒரு குளிர்பானத்தை குளிர்விக்கும்போது, ​​அதன் அளவு மாறுகிறது. இது வாயுவைக் கொண்டிருப்பதால், இந்த வகையான வடிவமைப்பு, அளவு அதிகரிக்கும் போது மற்றும் அழுத்தம் கட்டுப்படுத்தப்படும் போது பாட்டிலை சரிசெய்ய உதவுகிறது.

இதனுடன், இந்த பாட்டில்களின் கீழ் பகுதியும் மேல் பகுதியை விட இறுக்கமாக செய்யப்படுகிறது. இது பாட்டில் அழுத்தத்தை எளிதில் தாங்கும். இதன் காரணமாகவே குளிர்பானங்களின் அடிப்பகுதி தட்டையாக இல்லாமல் ஸ்பைக் ஸ்டைலில் இருக்கிறது.

உங்க வீட்டு ஃப்ரீசர் இப்படி இருக்கா? 'இப்படி' பண்ணுங்க இனி ஐஸ் கட்டி பிடிக்காது!

Latest Videos

click me!