வீட்டில் எலி தொல்லையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க; ஓடிவிடும்!

Published : Oct 16, 2024, 11:28 AM ISTUpdated : Oct 16, 2024, 11:37 AM IST

Camphor For Rat Control : வீட்டில் எலி தொல்லை இருந்தால் அதை கற்பூரத்தை கொண்டு எப்படி விரட்டுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
வீட்டில் எலி தொல்லையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க; ஓடிவிடும்!
Camphor For Rat Control In Tamil

பலருடைய வீடுகளில் எலி தொல்லை அதிகமாகவே இருக்கும். வீட்டில் இருக்கும் எலிகளை விரட்டி அடிக்க நாம் மருந்துகள், எலிப்பொறி வாங்கி வைத்தாலும் அவற்றின் தொல்லை இருக்க தான் செய்யும். எலி பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதும், சோபாக்களை பிய்த்து போடுவதும், எலக்ட்ரானிக் கேபிள்களை கடிப்பதும், துணிமணிகளை கிழிப்பதும் இப்படி எந்த ஒரு பொருளையும் விட்டு வைக்காது. 

ஒருவேளை வீட்டில் இருக்கும் எலிகளை நீங்கள் கண்டுக்காமல் அப்படியே போனால், அவை குட்டிகளைப் போட்டு அவற்றின் எண்ணிக்கை வேகமாக பெறுக ஆரம்பித்து விடும். அதுமட்டுமின்றி எலிகளால் மனிதர்களாகிய நமக்கு பல நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. இதனால் வாந்தி, காய்ச்சல், குமட்டல் போன்ற தீவிர பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி,
சில சமயங்களில் உயிரிழப்பு கூட நிகழலாம்.

 

25
Camphor For Rat Control In Tamil

அதுவும் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எலித் தொல்லை இருந்தால் ரொம்பவே ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் எலிகள் வாய் வைக்கும் போது அவற்றில் இருந்து தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு பரவும். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் எலிகளை விரட்ட மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு விரட்டி எடுக்கலாம்.

இதையும் படிங்க: பல்லி இனி உங்கள் வீட்டு பக்கமே வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!!

35
Camphor For Rat Control In Tamil

எலிகளால் வரும் நோய்கள்: 

ப்ளே நோய், ஹெப்படைடிஸ் ஈ போன்ற பல கிருமிகள் எலியின் மூலம் மனிதனுக்கு பரவுகின்றது. இது தவிர எலியின் சிறுநீர் மூலம் மனிதனுக்கு எலி காய்ச்சல் பரவுகிறது. உங்களுக்கு தெரியுமா.. எலியின் உதிரும் முடியில் இருந்த கூட மோசமான நோய்கள் உற்பத்தியாகிறது. இது தான் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்களுக்கு மூல காரணமாகும்.

இதையும் படிங்க:  என்ன வீட்டிற்கு வந்த பூரானை கொல்லக் கூடாதா..? ஏன் அப்படி தெரியுமா..?

45
Camphor For Rat Control In Tamil

வீட்டில் எலிகள் வர காரணம்:

எலிகளை சுண்டி இழுக்கும் உணவுப் பொருட்களை வீட்டில் ஆங்காங்கே போடுவது.

மழைக்காலத்தில் கழிவு நீர் தேங்கி இருந்தால் சாக்கடை கழிவு குழாய் வழியாக எலிகள் வீட்டிற்கு சுலபமாக வந்துவிடும். 

இது தவிர குளிர்காலத்தில் தங்குவதற்கு இடம் தேவை என்பதால் வீட்டிற்கு வர வாய்ப்புள்ளது. 

மேலும் வீடு சுத்தமாக இல்லை என்றால் கூட எலிகள் வரலாம்.

சரி வாங்க இப்போது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தால் அதை கற்பூரத்தை கொண்டு எப்படி விரட்டுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

55
Camphor For Rat Control In Tamil

கற்பூரத்தை கொண்டு வீட்டில் இருக்கும் எலிகளை விரட்ட டிப்ஸ்:

கற்பூரம்

கற்பூரத்தை கொண்டு வீட்டில் இருக்கும் எலிகளை சுலபமாக விரட்டி அடிக்கலாம். ஏனெனில் கற்பூரத்தில் இருந்து வரும் வலுவான வாசனை எலிகளுக்கு பிடிக்காது. மேலும் இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் மலிவான தீர்வாகும்.

பயன்படுத்தும் முறை:

இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஐந்தாறு கற்பூரத்தை சேர்க்கவும். கற்பூரம் தண்ணீரில் நன்றாக கரைந்தவுடன் அந்த தண்ணீரை கொண்டு வீடு முழுவதும் சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக எலிகள் வரும் இடத்தில் நன்கு துடைக்கவும். வேண்டுமானால் எலிகள் வீட்டில் நுழையும் மூலைகளில் சிறிய கற்பூர துண்டுகளை வைக்கலாம். அதுமட்டுமின்றி கற்பூரத்துடன் நீங்கள் மிளகுக்கீரை எண்ணெயை சேர்க்கலாம். 

இந்த தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் அவற்றிலிருந்து ஒரு வாசனை எலிகளுக்கு பிடிக்காது. அவை வீட்டிலிருந்து ஓடிவிடும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் எலிகள் உங்கள் வீட்டிற்கு வரவே வராது.

Read more Photos on
click me!

Recommended Stories