
கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. கிரீன் டீ தொடர்ந்து குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும் மற்றும் உடல் எடையும் குறையும். மேலும் இதில் இருக்கும் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், கொழுப்பு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி கிரீன் டீ சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு தெரியுமா புற்று நோய்க்கு கிரீன் டீ ரொம்பவே நல்லது.
கிரீன் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு கிரீன் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக உயரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த டீ ரொம்பவே நல்லது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம், அதில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு உடலில் சில பிரச்சனை உள்ளவர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். எனவே எந்தெந்த நபர்கள் கிரீன் டீ குடிக்க கூடாது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: கிரீன் டீ vs இஞ்சி டீ - எந்த 'டீ' எடையை குறைப்பதில் சிறந்தது? பலரும் அறியா தகவல்
தலைவலி உள்ளவர்கள்:
கிரீன் டீ எல்லா பிரச்சனைக்கும் நல்லது என்றாலும் தலைவலி உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் காஃபின் ஒற்றை தலைவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே ஒரு நாளைக்கு ஒரு கப் கிரீன் டீ குடிப்பது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதைவிட அளவுக்கு அதிகமாக குடித்தால் உங்களது பிரச்சினை மேலும் அதிகரிக்கும். அதாவது, ஒரு நாளைக்கு 2-3 கப் கிரீன் டீ குடித்தால் தலைவலி அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இரத்த சோகை உள்ளவர்கள்:
உடலில் இரும்புச்சத்து இல்லை என்றால் ரத்த சோகை ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு ரத்த சோகை இருந்தால் நீங்கள் கிரீன் டீ குடிக்க கூடாது. ஏனெனில் கிரீன் டீ உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கும். எனவே உங்களுக்கு ரத்த சோகை அல்லது இரும்பு சத்து குறைபாடு இருந்தால் நீங்கள் கிரீன் டீ அதிகமாக குடிக்க வேண்டாம். குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கு மேல் கிரீன் டீயை குடித்தால் உங்களது பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள்:
உங்களுக்கு அசிடிட்டி அல்லது வாயு பிரச்சனை இருந்தால் நீங்கள் கிரீன் டீயை அதிகமாக குடிக்க வேண்டாம். ஏனெனில் கிரீன் டீயில் இருக்கும் டானின் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்க செய்யும். இதனால் உங்களுக்கு வயிற்று வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி வயிற்றில் எரியும் உணர்வு, வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகள் & தாய்பாலூட்டும் பெண்கள்:
கர்ப்பிணிகள் மற்றும் தாய்பாலூட்டும் பெண்கள் கிரீன் டீ குடிப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் காஃபின் போன்ற கூறுகள் கர்ப்ப கால சிக்கலை அதிகரிக்க செய்யும். முக்கியமாக ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கு மேல் கிரீன் டீ குடித்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல தாய்பாலூட்டும் பெண்களும் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் அதனால் புதிதாக பிறந்த குழந்தை தான் பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்தி & எடை இழப்புக்கு! கிரீன் டீயில் இதை சேர்த்து குடிங்க!
இவர்களும் கிரீன் டீ குடிக்க கூடாது:
1. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்க வேண்டாம்.
2. இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் கிரீன் டீ குடிக்க கூடாது.
3. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரீன் டீயை குறைந்த அளவில் மட்டுமே குடிக்க வேண்டும்.
4. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் கிரீன் டீயை குடிக்க வேண்டாம்.
5. கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களும் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் கிரீன் டீயை குடிக்க கூடாது.