
பொதுவாக குழந்தைகள் சன்டெ வந்தாலே தங்கள் பெற்றோரை வெளியே அழைத்துச் செல்லும்படி வற்புறுத்துவார்கள். ஒருவேளை பெற்றோர்கள் அதை நிறைவேற்றவில்லை என்றால் குழந்தைகள் மன வருத்தம் அடைவார்கள் மற்றும் கோபப்படுவார்கள். மேலும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது ரொம்பவே கஷ்டம் தான்.
ஆனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் பிஸியாக வைத்தால் அவர்கள் வெளியே செல்ல ஒருபோதும் வற்புறுத்தவே மாட்டார்கள் தெரியுமா? ஆம், குழந்தைகள் வீட்டில் சும்மா இருந்தால் அவர்கள் வெளியே அழைத்துச் செல்லும்படிதான் வற்புறுத்துவார்கள். அதுவே நீங்கள் அவர்களை பிஸியாக வைத்தால் அவர்கள் ஒருபோதும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களை எப்படி பிஸியாக வைப்பது என்று உங்களுக்கு தெரியவில்லையா? உங்களுக்காக சில குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தைகளை நீங்கள் வீட்டில் பிஸியாக வைத்திருக்க முடியும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: பெற்றோரே உங்க குழந்தைகளை பாசிடிவாக மாற்றும் '5' டிப்ஸ்!!
குழந்தைகளை பிசியாக வைப்பதற்கான வழிகள்:
1. நியூஸ் பேப்பர் படிக்க சொல்லுங்கள்:
பெரும்பாலான வீட்டில் கண்டிப்பாக செய்தித்தாள் வாங்குவார்கள். எனவே வீட்டில் இருக்கும் குழந்தைகளை செய்தித்தாள் படிக்க வைத்தால் அவர்கள் வீட்டில் சும்மா இருப்பதாக உணர மாட்டார்கள். அவர்கள் நேரமும் கடந்து போகும். அதுமட்டுமின்றி, செய்தித்தாள் வாசிப்பதால் குழந்தைகளின் வாசிப்பு திறனும் மேம்படும். செய்தித்தாளைத் தவிர குழந்தைகளின் படிப்பு தொடர்பான புத்தகங்கள் அல்லது கதை புக் கூட குழந்தைகளை படிக்க வைக்கலாம். குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவும்.
2. சமையலில் உதவ கற்றுக் கொடுங்கள்:
சமையலறையில் நீங்கள் சமைக்கும் போது உங்களுக்கு ஏதாவது உதவி செய்யுமாறு அவர்களிடம் கேளுங்கள். மேலும் அவர்களுக்கு சில விஷயங்களையும் கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் வீட்டு வேலைகளை செய்வதில் ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள்.
3. காகிதத்தில் கைவினை செய்தல்:
வீட்டில் குழந்தைகளை பிசியாக வைக்க விரும்பினால் காகிதத்தில் கைவினை பணியை செய்ய சொல்லுங்கள். இதனால் அவர்கள் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மேலும் செய்தித்தாளில் கூட கைவினைப் பொருட்களை செய்யும்படி குழந்தைகளிடம் சொல்லலாம். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் படைப்பாற்றல் மிக்கவராக மாறுவார்கள்.
4. வீட்டை சுத்தம் செய்ய கற்றுக் கொடுங்கள்:
வீட்டில் குழந்தைகள் பிஸியாக வைக்க வீட்டை சுத்தம் செய்ய அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அதாவது டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை சுத்தம் செய்ய குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். ஆனால் அவர்கள் அதை சுமையாக உணரக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக அவர்கள் அதை மகிழ்ச்சியாக தான் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: குழந்தைங்க தப்பு பண்ணா தண்டனையா? அதை விட இந்த முறை தான் சிறந்தது!!
5. புதிர்:
உங்கள் குழந்தைக்கு ஏதாவது ஒரு பொருள் பிடித்திருந்தால் அதை மறைத்து வைக்கவும். பிறகு அதை கண்டுபிடிக்கும் படி குழந்தையிடம் சொல்லுங்கள். அதுமட்டுமின்றி, அதை கண்டுபிடிப்பதற்கு சில புதிர்களையும் அவர்களுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் தங்களது பிடித்த பொருட்களை கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பார்கள் ல். இவ்வாறு உங்கள் குழந்தையை பிஸியாக வைப்பதன் மூலம் அவர்களது மனம் வளர்ச்சி அடையும் மற்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
6. புதிய விளையாட்டை சொல்லிக் கொடுங்கள்:
பொதுவாக குழந்தைகள் மொபைல் போனில் தான் அதிகமாக கேம் விளையாடுவார்கள். ஆனால் நீங்கள் மொபைல் போனை கொடுப்பதற்கு பதிலாக, ஏதாவது ஒரு புதிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுங்கள்.