Homework : ஹோம்வொர்க்கை கண்டுபிடிச்சது யாரு? எப்போ இருந்து பசங்க இதை செய்ய ஆரம்பிச்சாங்க?

Published : Sep 08, 2026, 11:46 AM IST

Homework : வீட்டுப்பாடத்தைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியாமல் புலம்பாத மாணவர்களே இல்லை. அந்த வீட்டுப்பாடம் எப்படி உருவானது, அதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாங்க.

PREV
13
எப்படி உருவானது ஹோம்வொர்க்?

பழங்கால ரோமானியப் பேரரசு காலத்திலேயே வீட்டுப்பாடத்திற்கான ஆரம்பகால வித்துக்கள் விழுந்துவிட்டன. இருப்பினும், இன்றைய நவீன வடிவத்திலான ஹோம்வொர்க்கை 1905-ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியரான ராபர்டோ நெவிலிஸ் கண்டுபிடித்ததாக ஒரு பரவலான வரலாறு உண்டு. வகுப்பறையில் அதிக சேட்டை செய்து தொல்லை தரும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்கும் ஒரு முறையாகவே அவர் முதன்முதலில் இந்த வீட்டுப்பாடத்தைக் கொண்டு வந்தார்.

ஆரம்பத்தில் மாணவர்களுக்கான ஒரு தண்டனையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, அதன் பிறகு அமெரிக்காவின் பிரபல கல்வியாளரான ஹோரேஸ் மான் போன்றோரின் தீவிர முயற்சியால் உலகெங்கிலும் உள்ள கல்விமுறையின் தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக மாறியது.

இதையும் படிங்க : Samrajya Yoga : விஷ்ணுவும்-குருவும் சேர்ந்து வழங்கும் சாம்ராஜ்ய யோகம்! 3 ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை!

23
ஹோம்வொர்க்கால் கிடைக்கும் நன்மைகள்

வகுப்பறையில் பாடம் புரியற மாதிரி இருந்தாலும், தனியாக செய்யும்போதுதான் மாணவர்களுக்கு அது எந்தளவு புரிஞ்சிருக்குனு தெரியும். இது மாணவர்களின் சுய சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் நினைவாற்றலை பலப்படுத்துகிறது. புரியாத விஷயங்களை மீண்டும் புத்தகத்தில் தேடிப் படிக்கும் ஆர்வத்தையும் இது தூண்டுகிறது. படித்ததை மனதில் பதிய வைக்கும் ஒரு பயிற்சி இது.

இதையும் படிங்க : SIP : 60 வயதில் ரூ.10 கோடி சேர்க்கணுமா? எந்த வயதில் தொடங்கினால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

33
நேர மேலாண்மை, ஒழுக்கம்!

ஹோம்வொர்க் என்பது வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமல்ல. அது வாழ்க்கைக்குத் தேவையான நேர மேலாண்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறது. விளையாட எவ்வளவு நேரம், வேலையை முடிக்க எவ்வளவு நேரம் என திட்டமிட பிள்ளைகள் சிறுவயதிலேயே கற்றுக்கொள்கிறார்கள். இது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு நிலையை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. எனவே, வீட்டுப்பாடம் சுமையாக இல்லாமல் இருந்தால், அது ஒரு சிறந்த கருவியாக மாறும்.

இதையும் படிங்க : Fruits : உலர் பழங்களா? ஃபிரெஷ் பழங்களா? எது உடலுக்கு நல்லது?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories