இந்த பாத்திரத்தில் ஒருபோதும் உணவு சமைக்காதீங்க.. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்..!!

First Published Jun 24, 2023, 11:44 AM IST

உங்கள் சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் பல வகையான பாத்திரங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சமையலுக்கு சிறந்த மற்றும் மோசமான பாத்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சமைப்பது ஒரு கலை என்று நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில், நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமும் முக்கியம். நீங்கள் சமைக்க பயன்படுத்து பாத்திரம் உங்கள் உணவின் தரத்தை மட்டும் பாதிக்காது, ஆரோக்கியத்தையும் பாதிக்கும் எனவே நாம் எந்த பாத்திரத்தில் சமைக்க கூடாது என்பதை பார்க்கலாம். 

செப்பு சமையல் பாத்திரங்கள்:
செப்பு பாத்திரங்கள் தண்ணீர் குடிக்க ஏற்றது. ஆனால் அதை உணவு சமைக்க பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் நாம் சமைக்கும்போது உணவில் உப்பு சேர்க்கிறோம். உப்பில் இருக்கும் அயோடின் உடனடியாக இதனுடன் கலந்து வினை புரிகிறது. இதனால் இது அதிக செப்புத் துகள்களில் வெளியிடுகிறது. இது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அல்ல. எனவே தான் சமையல் செய்யும் போது பொதுவாக செப்பு பாத்திரங்களை தவிர்க்க வேண்டும். மேலும், அது தீயில் வைக்கப்படும் போது இரசாயனங்களை வெளியேறுகிறது. இது உணவுடன் கலக்கப்படுகிறது. இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதிலிருந்து நீங்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்பினால், செப்புக் கிளாஸில் தண்ணீரைக் குடிக்கலாம், செப்புத் தட்டில் சாப்பிடலாம் மற்றும் செப்புக் குடங்களில் தண்ணீரைச் சேமிக்கலாம்.

பித்தளை பாத்திரங்கள்:
பித்தளை ஒரு பொதுவான உலோகம். பெரும்பாலான பாரம்பரிய சமையல் பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்படுகின்றன. பாத்திரத்தின் அடிப்பகுதி கனமாக இருப்பதால், கோழி, மட்டன் மற்றும் பிரியாணி போன்ற ரெசிபிகள் இதில் தான் செய்யப்படுகிறது. பித்தளையை சூடாக்கும் போது உப்பு நிறைந்த உணவுடன் வினைபுரிந்து நம் உடலுக்கு தீங்கு விளைவிகிறது. ஆனால் மற்ற பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது பித்தளை அவ்வளவு தீங்கு விளைவிப்பதில்லை மற்றும் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தலாம்.

அலுமினிய சமையல் பாத்திரங்கள்:
அலுமினியம் ஒரு சிறந்த வெப்ப கடத்தியாகும். இதை அதிக தீயில் வைக்கப்படும் போது, உலோகம் தக்காளி மற்றும் வினிகர் போன்ற அமில உணவுகளுடன் மிகவும் வினைபுரியும். அலுமினியத்துடன் அமிலத்தன்மை கொண்ட காய்கறிகளின் இந்த இரசாயன எதிர்வினை சமைக்கும் போது உணவில் கலக்கிறது. இந்த உணவு, உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாதிக்கலாம். மேலும் இதில் நீங்கள் சமையல் செய்யும் போது எப்போதும் ஒரு மர கரண்டியை பயன்படுத்த வேண்டும். 

cook ware

சமையலுக்கு சிறந்த சாத்தியமான உலோகம்:

இரும்பு, துருப்பிடிக்காத எஃகு மற்றும் களிமண் பானைகள் ஆகியவை சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த சமையல் பாத்திரம் ஆகும். மண்பானை ஈரப்பதம் மற்றும் வெப்பத்தை உணவின் வழியாகச் செல்ல அனுமதிக்கிறது. இது ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க உதவுகிறது. களிமண் பானை அன்றாடப் பயன்பாட்டில் பயன்படுத்த எளிதானது அல்ல. அதனால் அது சமையலறைகளில் மிகவும் பிரபலமாக இல்லை.

cook ware

சமையலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு சிறந்த உலோகம் துருப்பிடிக்காத எஃகு ஆகும். குரோமியம், நிக்கல், சிலிக்கான், கார்பன் ஆகியவற்றைக் கலந்து இந்தப் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை நீண்ட காலத்திற்கு வெப்பத்தைத் தக்கவைத்து கொள்கிறது. போலி எஃகு பாத்திரங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், நல்ல தரமான துருப்பிடிக்காத எஃகு மட்டுமே வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதுபோல், முற்றிலும் பூஜ்ஜிய தீங்கு விளைவிக்கும் சிறந்த உலோகம் இரும்பு ஆகும். நெருப்பில் வைக்கப்படும் போது, பாத்திரம் இரும்பை வெளியிடுகிறது. இது உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு அவசியம். இரும்பு பாத்திரங்கள் சமமாக சூடாக்கி, உணவின் அனைத்து பகுதிகளையும் சரியாக சமைக்கிறது.

இதையும் படிங்க: உலக பணக்காரர் மனைவி என்றாலும் ஒரு கணக்கில்லையா? தலை சுற்ற வைக்கும் நீதா அம்பானியின் ஹேண்ட் பேக் விலை!!
 
இருப்பினும், உங்கள் வீட்டில் இருக்கும் செம்பு, பித்தளை அல்லது அலுமினியப் பாத்திரங்கள் அனைத்தையும் உடனடியாக தூக்கி எறியத் தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களை மேலே கொடுக்கப்பட்ட உலோகங்களில் ஏதேனும் ஒன்றை மாற்றினால் போதும். உங்கள் அலுமினிய குக்கரை துருப்பிடிக்காத எஃகு மூலம் மாற்றலாம் அல்லது உங்கள் செப்பு கடாயை இரும்பு கடாயாய் மாற்றலாம். உங்கள சமையல் பாத்திரங்களில் இந்த சில மாற்றங்களைச் செய்வது, சிறந்த வாழ்க்கையை நோக்கிச் செல்ல உதவும்.

click me!