ரயில்ல போறப்ப செல்போன் கீழே விழுந்துட்டா? இந்த எண்ணுக்கு '1' கால் பண்ணுங்க!! உடனே கிடைக்கும் 

First Published | Dec 13, 2024, 3:13 PM IST

Mobile Fell In Train : ரயில் பயணங்களின் போது உங்களுடைய பர்ஸ், பை என எது கீழே விழுந்தாலும் அதை  திரும்பப் பெற செய்ய வேண்டியவை குறித்து இங்கு பார்க்கலாம். 

mobile fell in train in tamil

உலகத்தில் உள்ள ரயில்வே துறையில் இந்தியன் ரயில்வே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவுக்கு அதன் பயன்பாடும் அதிகமா உள்ளது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் பயணங்கள் பொருளாதாரரீதியாக  மக்களுக்கு வசதியான போக்குவரத்து வசதியாகும். அதற்கு அதிக செலவு செய்யத் தேவையில்லை. ஆனால் ரயில் பயணங்கள் பலர் பயணம் செய்யும் பொதுவான போக்குவரத்து என்பதால் தனிநபர் வசதிக்காக நினைத்த நேரத்தில் அதை நிறுத்தமுடியாது. 

what to do if a mobile falls from a moving train track in tamil

ரயில் பயணங்களில் நாம் கொண்டு செல்லும் பொருள்கள் கீழே விழும் போது அதை திரும்ப எடுக்க முடியாது. ரயிலின் வாசல் அருகே நிற்கும்போது பர்ஸ், செல்போன் என ஏதாவது விலையுர்ந்த பொருள்கள் விழும்போது அதை எடுக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த சிக்கலை சரிசெய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் பலரும் அறியாத விஷயத்தை இந்த பதிவில் காணலாம். 

இதையும் படிங்க: ஹெவி கேமிங் பிரியரா? உங்களுக்காக வெறித்தனமான ஸ்மார்ட்போன் இதுதான்!

Tap to resize

phone falls from train tracks in tamil

உங்களுடைய பொருள்களை ரயிலில் செல்லும்போது வழியில் கீழே தவறவிட்டால் அதை திரும்ப பெற ரயில்வே துறை தனி வழிகளை கொண்டுள்ளது. அதனால் இனிமேல் உங்களுடைய பொருள்கள் கீழே விழுந்தால் பதற்றத்தில் உடனே ரயிலில் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்த வேண்டாம்.

ஏனென்றால் அவசரகாலங்களை தவிர மற்ற நேரங்களில் சங்கிலியை பிடித்து இழுப்பது அபராதம் அல்லது சிறை செல்லும் நிலைக்கு உங்களைத் தள்ளிவிடும். இதற்கு பதிலாக ரயிலில் செல்லும்போது உங்களுடைய பர்ஸ் அல்லது செல்போன் தவறி வெளியே விழுந்தால் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள தூணில் மஞ்சள் மற்றும் பச்சை வண்ணத்தில் எழுதியுள்ள எண்களை குறித்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க:  உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா ஒழுங்கா வேலை செய்யலையா.. உடனே இதை செய்யுங்க!!

mobile falls from moving train in tamil

இந்த தகவலை டிக்கெட் சேகரிப்பாளரிடம் (டிடி) தெரிவிக்க வேண்டும். அவரிடம் எந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு மத்தியில் பொருள்களை தவறவிட்டீர்கள் என்பதையும், ஏற்கனவே நீங்கள் குறித்து வைத்த எண்களையும் காட்ட வேண்டும். இதை உடனடியாக செய்ய முடியாதபட்சத்தில் ரயில்வே காவல் படைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதற்கு 182 என்ற எண்ணிற்கு அல்லது பொது இரயில்வே உதவி எண்ணான 139-க்கு தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos

click me!