Parent-daughter relationships in tamil
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் குழந்தை பருவத்தில் இருந்து அவர்களுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பல பெற்றோர் பெண் குழந்தைகளை வளர்க்கும் போது சில தவறுகளை செய்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுகிறார்கள்.
Things you should never say to your daughter in tamil
பெண் குழந்தையிடம் பெற்றோர் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்:
1. வேலையில் பாலினம் பார்க்க வேண்டாம்:
பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். அதாவது, ஆண்கள் இந்த வேலை தான் செய்ய வேண்டும் பெண்கள் இந்த விளிதான் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள் ஆனால், பாலின் அடிப்படையில் வேலையை ஒருபோதும் பிரிக்கவே கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கும். விரும்பியதை செய்ய அனுமதிப்பது பெற்றோரின் கடமை. அந்த வகையில், உங்கள் வீட்டு பெண் குழந்தைகள் ஏதேனும் ஒரு வேலையை தேர்ந்தெடுத்தால் அது அவள் செய்யக் கூடாது என்று அவர்களை சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
2. ஆடையில் கட்டுப்பாடு:
ஆடையில் கட்டுப்பாடு அவசியம் தான். ஆனால் எந்த ஆடை சிறந்தது.. எது அணியக்கூடாது என்று அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும். ஒருவேளை உங்களது பெண் குழந்தை ஜீன்ஸ், ஷர்ட் அணிய விரும்பினால் அது தவறு இல்லை. ஆனால் இடத்திற்கு ஏற்றவாறு அணிய பழக்கப்படுத்துங்கள்.
Positive communication with daughters in tamil
3. உன்னால் முடியாது என்று சொல்லாதே!
உன்னால் இதை செய்யவே முடியாது!என்று உங்கள் பெண் பிள்ளையின் திறமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இந்த தவறை பல பெற்றோர்கள் செய்கிறார்கள் பெற்றோர்கள் செய்யும் இந்த தவறு அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே உங்கள் பெண் குழந்தையின் ஆர்வத்தை கண்டறிந்து அவர்களை ஊக்குவியுங்கள். ஒருபோதும் அவர்களை பார்த்து 'உன்னால் முடியாது' என்று சொல்லி காயப்படுத்தி விடாதீர்கள்.
4. சத்தமாக சிரிக்காதே!
சிரிப்பு என்பது ஒவ்வொருவருடைய சுதந்திரம். ஆனால் பெற்றோர் பலர் வீட்டில் பெண் பிள்ளை சத்தமாக சிரித்தால் அது மிகப் பெரிய தவறு என்று அவர்களை கத்துவார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. இதனால் அவர்களது சுதந்திரம் பறிபோகிறது என்று அவர்கள் உணர்வார்கள். எனவே அவர்கள் விரும்பியவாறு சிரிக்க அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்.
Parenting tips in tamil
5. எடையை வைத்து குறை சொல்லாதீங்க:
இன்று வரை பல பெற்றோர்கள் செய்யும் முக்கியமான தவறுகளில் இதுவும் ஒன்றாகும். அதாவது பெண்ணின் எடை இப்படி இருக்க வேண்டும்... அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று அவர்களை கேலி செய்யக்கூடாது. உங்களது மகள் குண்டாக இருப்பதை நீங்கள் சுட்டிக் காட்டினால் அவள் தாழ்மையாக உணர்வாள். அந்தவகையில், உங்க வீட்டில் இருக்கும் பெண் குழந்தையின் எடை கூடினால் அவளை ஒருபோதும் குறை கூறாதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் பெண் பிள்ளைக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிறைய பவுடர் போடும் தாயா நீங்க? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!!