குளிர்காலத்தில் வீட்டை சுத்தமாக வைப்பது மட்டுமின்றி, பாத்ரூமையும் சுத்தமாக வைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் சோம்பல் காரணமாக பாத்ரூமில் சுத்தம் செய்வதில்லை. இதனால் அழுக்குகள் படிந்து பாத்ரூமில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். எனவே, இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் பாத்ரூமை சில நிமிடங்களில் சுத்தம் செய்து விடலாம். இதனால் பாத்ரூமில் அழுக்குகள் நீங்கி வாசனையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
24
bathroom cleaning tips in tamil
குளிர்காலத்தில் பாத்ரூமை சுத்தம் செய்ய டிப்ஸ்:
1. முதலில் பாத்ரூமில் இருக்கும் கதவு ஜன்னல் ஒட்டடைகளை துடைக்க வேண்டும். பிறகு வாஷ்பேஷனில் இருக்கும் கண்ணாடியை ஒரு துணியால் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
2. ஒரு வாளியில் சூடான வெந்நீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரைக் கொண்டு பாத்ரூமில் இருக்கும் தரையை சுத்தம் செய்யுங்கள். இதனால் பாத்ரூமில் இருக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் எளிதாக நீங்கிவிடும். எலுமிச்சை பழத்திற்கு பதிலாக வெள்ளை வினிகர் கூட பயன்படுத்தலாம். ஆனால் வினிகர் கொண்டு சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
3. அதுபோல பாத்ரூம் தரையை சுத்தம் செய்ய சூடான நீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து பின் அந்த தண்ணீரை கொண்டு பாத்ரூமில் தரையை துடைக்க வேண்டும். இப்படி செய்தால் பாத்ரூம் தரையில் இருக்கும் கருமை, அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்கும்.
4. உங்கள் வீட்டு பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீசினால் அதை சுத்தம் செய்வதற்கு நேரமில்லை என்றால் நீங்கள் ரூம் பிரஸ்னர் பயன்படுத்தலாம். இதனால் பாத்ரூம் வாசனையாக இருக்கும். மேலும் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
5. பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீசினால் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவை பாத்ரூம் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும். பிறகு வெந்நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பாத்ரூம் துர்நாற்றம் நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
6. கழிப்பறை மற்றும் குளியலறையில் சில துளிகள் லாவண்டர் எண்ணெய் தண்ணீரில் கலந்து சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் துர்நாற்றம் நீங்கி வாசனையாக இருக்கும். இது தவிர ஒரு துணியில் வினிகர் கலந்து அதை குளிரழையில் வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.
7. பெரும்பாலும் குளிர்காலத்தில் அனைவரும் வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்தையும் மூடி வைத்திருப்போம் இதனால் வெளியிலிருந்து வரும் சுத்தமான காற்று வீட்டிற்குள் வராது. இதன் காரணமாக வீட்டில் ஈரப்பதத்தின் வாசனை அடிக்க ஆரம்பிக்கும். எனவே, வீட்டின் கதவு ஜன்னல் மட்டுமின்றி பாத்ரூமில் இருக்கும் ஜன்னலையும் சிறிது நேரம் திறந்து வைத்தால் சுத்தமான காற்று உள்ளே வரும். மேலும் பாத்ரூமில் துர்நாற்றம் நீங்கும்.
குறிப்பு: குளிர்காலத்தில் உங்கள் வீட்டு பாத்ரூம்மை கண்டிப்பாக வாரம் ஒரு முறை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்தால் பாத்ரூமில் தூசிகள், அழுக்குகள் ஒருபோதும் தாங்காது மற்றும் துர்நாற்றமும் அடிக்காது.