
குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம் தான். இது தவிர சிலர் வாந்தி, தலைவலி, ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளாலும் அவதிப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் வயிற்றின் ஆரோக்கியம் மோசமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், குளிர்காலத்தில் வயிற்று குளிர்ச்சி காரணமாக குமட்டல், வயிற்றுப் பிடிப்பு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் சிலர் மலச்சிக்கல் பிரச்சனையாலும் சிரமப்படுவார்கள். ஆனால், சில பருவகால பழங்களை சாப்பிட்டால் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். எனவே, குளிர்காலத்தில் வயிற்றில் ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்துல சின்ன வெங்காயத்தை பச்சையா சாப்பிடுங்க; இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!!
குளிர்காலத்தில் வயிற்று ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய 5 பழங்கள்:
1. சீதாப்பழம்:
ஆங்கிலத்தில் இது கஸ்டர்ட் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. சீதாப்பழம் வெளித்தோற்றத்திற்கு பார்க்க நன்றாக இருக்காது என்றாலும், அது ஏகப்பட்ட ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. குறிப்பாக சீதாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த பழம் சர்க்கரை சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
2. முள் சீத்தாப்பழம்:
குளிர்காலத்தில் வயிற்று அழுவதற்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று இந்த முள் சீத்தாப்பழம். இந்த பழம் உங்களது உடலை சமநிலை கொண்டுவர பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை வீக்கத்தை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் மற்றும் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.
3. கொய்யா:
கொய்யா கோடைகாலம் மட்டுமின்றி குளிர்காலத்திலும் கிடைக்கும் ஒரு பழமாகும். கொய்யாவில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளன. அவை இரண்டும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாக இருக்கும் மற்றும் கடினமான மலத்தையும் சுலபமாக வெளியேற்றி விடும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழம் ஜீரண சக்தியை சீராக செயல்படுத்த உதவுகிறது.
4. பப்பாளி:
பப்பாளி பழம் குளிர்காலத்திலும் கிடைக்கும். அதுவும் குறிப்பாக சிவப்பு பப்பாளியில் நார்ச்சத்து வைட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் அதிகம் உள்ளதால் அவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது தவிர பப்பாளியில் இருக்கும் பாப்பைன் என்சமன் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து மலத்தை மென்மையாக்கவும் மற்றும் பல வகையான வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கவும் உதவுகின்றது. எனவே குளிர்காலத்தில் பப்பாளி தினமும் சாப்பிடலாம்.
5. வாழைப்பழம்:
கோடை காலம் குளிர்காலம் என எந்த பருவத்திலும் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் வாழைப்பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் வீக்கத்தை குறைக்கவும் பெரிது உதவுகிறது. இதனால் செரிமானம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் பிரிட்ஜில் வைத்த காய்கறி சீக்கிரமே அழுகி போகுதா? 'இந்த' டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!