அதிக சர்க்கரை சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகள் :
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து இதனால் இதயம், எலும்புகள், தசைகள், சருமம், முடி போன்றவை நேரடியாக பாதிக்கப்படுகிறது. இது தவிர, மூளை உட்பட்ட பிற உடல் பாகங்களும் சேதமடைகின்றது. அந்தவகையில், நாம் சர்க்கரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய உடலில் சில அறிகுறிகள் ஏற்படும். அது என்ன மாதிரியான அறிகுறிகள் என்று இப்போது பார்க்கலாம்.
உடலில் ஆற்றல் குறையும்
நாம் அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய உடலில் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இதனால் உடல் திடீரென செயலிழக்கும். மேலும் நம்முடைய மனநிலை மற்றும் உற்பத்தி திறன் மோசமாக பாதிக்கப்படும்.
மனநிலை பாதிக்கப்படும்
அதிகப்படியான சர்க்கரை மனநிலையை பாதிக்கும். இதனால் உடல் ஆரோக்கியமானது விரைவாகவே பாதிப்படுகிறது. மேலும் உடலில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்படுவதால் எரிச்சல், பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.