ஒவ்வொருவருக்கும் இரத்த வகை மாறுபடும். இதுவரை நான்கு இரத்த வகைகள் குறித்து அறிவியல் நமக்கு சொல்கிறது. அவை: A,B,O,AB ஆகியவை ஆகும். இந்த ரத்த வகைகள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஆன்டிஜென்கள் மற்றும் ஆன்டிஜென்கள் இல்லாதிருத்தல் மூலம் வேறுபடுகின்றன. இந்த நான்கு ரத்தக் குழுக்களுடன் ஒவ்வொரு குழுவிலும் (+) அல்லது இல்லாத (-) Rh காரணி எனப்படும் புரதம் இருக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரத்தப் பிரிவுகள் மேலும் எட்டு வகைகளாக பிரிகிறது. அந்த வகையில், ஏ பாசிடிவ், நெகடிவ் (A+,A-), பி பாசிடிவி, நெகடிவ் (B+,B-), ஓ பாசிடிவ், நெகடிவ், (O+, O-), ஏபி பாசிடிவ், நெகடிவ் (AB+,AB-) என பிரிக்கலாம். ரத்த வகையை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அது மரபுரிமையாக வருவதாகும். நாம் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.
இதையும் படிங்க: O+ ரத்த வகையை சேர்ந்தவர்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா?