ரயில்பெட்டிகளில் வண்ணக்கோடுகள் ஏன் போடுறாங்க தெரியுமா..? நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா..?

Published : Jul 25, 2022, 03:37 PM IST

Train coaches: ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இருக்கும் வண்ணக்கோடுகள் எதைக் குறிக்கின்றன என்று என்றைக்காவது சிந்தித்து உண்டா..? ஒவ்வொன்றிற்கும் தனி தனி முக்கியத்துவங்கள் உள்ளன. அவரை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

PREV
17
ரயில்பெட்டிகளில் வண்ணக்கோடுகள் ஏன் போடுறாங்க தெரியுமா..? நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா..?
Train coaches:

நம்மில் பலருக்கும் ரயிலில் பயணம் செய்யும் அனுபவம் இருக்கும். அப்படி, நாம் ரயிலில் பயணம் செய்யும் போது, சில விஷயங்களை கவனித்து பார்க்க மாட்டோம். பிறகு, அந்த விஷயங்களை பற்றி சிந்தித்து பார்க்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சில நேரம் வியப்பாக கூட இருக்கும். அப்படியான ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 

27
Train coaches:

இந்தியாவில் 1853ம் ஆண்டு ஏப் 16ம் தேதி துவங்கப்பட்ட ரயில் சேவை 1951ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. இது, போக்குவரத்துக்கு அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் மற்றும் உலகின் 2-வது பெரிய நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மேலும், இன்று வரை ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், நடுத்தர மக்களுக்கேற்ற சிறந்த சிக்கனமான போக்குவரத்துக்கு அமைப்பாக இந்திய இரயில்வே உள்ளது. 
 

37
Train coaches:


ரயில் பெட்டிகளில் ஆங்காங்கே ஏதேதோ வண்ணக்கோடுகள், எழுத்துகளும் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கும் இந்த வண்ணக்கோடுகள், எதைக் குறிக்கின்றன என என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? ஆம் ரயில்பெட்டிகளில் இருக்கும் வண்ணக்கோடுகள் மற்ற ரயில் பெட்டிகளில் இருந்து வேறுபடுத்தி குறிப்பிடத்தக்க சில செயல்பாடுகளை பற்றி எடுத்துரைக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தனி தனி முக்கியத்துவங்கள் உள்ளன. அவரை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் படிக்க Cabbage juice: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் எடுத்துக்கோங்கோ...அப்புறம் நடக்கும் அதிசயம் பாருங்க...

47
Train coaches:

 நீலப்பெட்டியில் வெள்ளை கோடுகள்:

இந்த நீலநிற ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளை கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. பிளாட்பாராத்தில் பயணிகள் வரும் போது முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டு பிடிக்க இது இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.  பொதுவாக இந்தியாவில் விரைவுவண்டி, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

57

நீலம் மற்றும் சிவப்பு பெட்டிகளில் மஞ்சள் கோடுகள்:

நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மில்லியன் பயணிகள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். எனவே, பயணத்தில் போது கூட்ட நெரிசலில் சிக்கி  ஊனமுற்ற பயணிகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவர்களுக்கு என்று தனியே ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.எனவே,  நீலம் மற்றும் சிவப்பு பெட்டிகளில் மஞ்சள் கோடுகள் இருந்தால், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது உடல் ஊனமுற்ற பயணிகளுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க Cabbage juice: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் எடுத்துக்கோங்கோ...அப்புறம் நடக்கும் அதிசயம் பாருங்க...

67
Train coaches:

சாம்பல் பெட்டிகளில் சிவப்பு கோடுகள்

EMU/MEMU ரயில்களில் உள்ள முதல் வகுப்பு பெட்டிகள் சாம்பல் பெட்டிகள். அதை அடையாளம் காட்டுவதற்காக அதில் சிவப்பு நிறத்திலான கோடுகள் போடப்பட்டு இருக்கும்.

மேலும் படிக்க Cabbage juice: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் எடுத்துக்கோங்கோ...அப்புறம் நடக்கும் அதிசயம் பாருங்க...

சாம்பல் நிறப்பெட்டிகளில் பச்சை நிற கோடுகள்: 

சாம்பல் நிறத்தில் பச்சை நிற கோடுகள் உள்ள பெட்டிகள் பெண்களுக்கு மட்டுமானது என்பதைக் குறிக்கிறது. 

77
Train coaches:

மஞ்சள் நிறத்தில் ரயிலின் கடைசிப்பெட்டியில் 'X' என்ற குறியீடு:

ஒரு ரயில் தயாரான நிலையில், அதில் எந்த பழுதோ அல்லது பிரச்சனையோ இல்லை என்பதை குறிக்க 'X' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இது ரயிலின் எல்லா பெட்டிகள் மற்றும் அதனுடைய இயக்கத்திறனை ஆராய்ந்த பிறகே, 'X' என்ற குறியீடு ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிறத்தில் வரையப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories