குரங்கு அம்மை பரவலுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் காரணமா..? உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை...

First Published | Jul 25, 2022, 2:34 PM IST

WHO Monkey Pox: குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.  எனவே, காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Monkey Pox:

பீதியை கிளப்பும் குரங்கு அம்மை:
 
கொரோனாவை தொடர்ந்து, அடுத்து அதிரடியாக குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் மூன்று பேர் இந்த குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

மேலும் படிக்க...Monkeypox virus: உலகை அச்சுறுத்தும் அடுத்த உயிர்கொல்லி நோய்...? அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்

Monkey Pox:

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய கண்டத்தின் பிராந்திய இயக்குநர், குரங்கம்மையை கட்டுப்படுத்தும் விதமாக கண்காணிப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உறுப்பு நாடுகளை கேட்டு கொண்டுள்ளார். உலகளவில் கவலை அளிக்கும் விதமான பொது சுகாதார அவசர நிலையாக குரங்கம்மை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Tap to resize

Monkey Pox:

ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் அதிகம் பரவுகிறது..?

இதுதொடர்பாக, பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''குரங்கு அம்மை என்பது ஒருவகையான அம்மை நோய். இது வைரஸ் தொற்றில் இருந்து பரவுகிறது. இந்த அம்மை நோய் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை வைத்து கொள்ளும்  ஆண்களிடையே  அதிகமாக பரவுகிறது. இதுவரை 96 சதவீதம் நோய் பாதிப்பு, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களில் கண்டறியப்பட்டுள்ளது.  எனவே, பாதிக்கப்படகூடிய மக்களிடையே கவனம் செலுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டால் இதை கட்டுப்படுத்துவது சாத்தியமே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...Cabbage juice: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் எடுத்துக்கோங்கோ...அப்புறம் நடக்கும் அதிசயம் பாருங்க...

Monkey pox

தற்காத்து கொள்வது எப்படி..?

எனவே, ஒருவேளை உங்களுக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகம்  இருந்தால், புதிய நபர்களுடன் அல்லது பல பேருடன் பாலியல் உறவுகொள்ளும்போது விழிப்புடன் இருங்கள். அத்துடன், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக பாராமரித்து, மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், முகக்கவசம் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் படிக்க...Monkeypox virus: உலகை அச்சுறுத்தும் அடுத்த உயிர்கொல்லி நோய்...? அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்

Monkey Pox:

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள்..

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல்,  தொண்டை புண், இருமல், நிணநீர் கணுக்கள் வீக்கம்போன்றவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். முதலில் சிவப்பு நிற கொப்பளங்களாக மாறும். அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். எனவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

Latest Videos

click me!