வெள்ளேரி காய் ஜூஸ் பலர் உடல் எடையை குறைக்க அருந்துவார்கள் அதோடு, சிறிதளவு எலுமிச்சை பழ சாறு சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.
வெறும் எலுமிச்சை சாறு பருகுபவர்கள் அதனுடன், சிறிதளவு இஞ்சி சாறு சிறிதளவு கலந்து குடிப்பது நல்ல பலன் தரும்.
ஆப்பிள் ஜூஸ் நீங்கள் அருந்தும் போது அதில் லவங்க பட்டை கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது, லவங்க பட்டை தூள் சேர்த்து சாப்பிடுவதால் உங்களுடைய கொழுப்பு எளிதில் கரையும்.
மாதுளை பழம் ஜூஸ் நீங்கள் அருந்தும் போது அதில் சில புதினா இலைகளை சேர்த்து கொள்ளுங்கள், இது புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டும் இன்றி.. உடலுக்கும் மிகவும் நல்லது.
ஆரஞ்சு பழ சாறு கண்டிப்பாக ஒரு வாரத்தில் ஒரு முறையாவது எடுத்து கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகள் குறையும். முடிந்த வரை இது போன்ற பழ சாறுகளில் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது ஆரோக்கியமானது.
அதிக நீர் சத்து கொண்ட தர்பூசணி பழத்தை நீங்கள் ஜூஸாக குடிக்கும் போது, அதனுடன் கொஞ்சம் புதினா இலை அல்லது, ஸ்டாப்பேரி பழம் சேர்த்து கொள்வது சிறந்தது.