நெல்லிக்காய் & எலுமிச்சை சாறு
நெல்லிக்காய், எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி பலவிதமான கூந்தல் பிரச்சனைகளைக் குறைக்கலாம். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை எடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இதை கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, சாதாரண தண்ணீரில் கூந்தலை அலசவும். இது முடி உதிர்தலை வெகுவாகக் குறைக்கும்.
நெல்லிக்காய் & சிகைக்காய் பொடி
நெல்லிக்காய், சிகைக்காய் பொடி கூந்தல் பிரச்சனைகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நெல்லிக்காய், சிகைக்காய் பொடியை சம அளவு எடுத்து கெட்டியான பேஸ்ட் போல செய்யவும்.
இதை கூந்தலில் நன்றாகத் தடவி 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்னர் கூந்தலை நன்றாக அலசவும். இது முடி உதிர்தலைக் குறைத்து, நரைமுடி வருவதைத் தடுக்கும்.