Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!

Published : Jul 12, 2026, 05:16 PM IST

Water Bottle Cap Color Meaning: தண்ணீர் பாட்டில்களின் மூடிகள் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது வெறும் அழகு மட்டும் கிடையாது. அது தண்ணீரின் வகை மற்றும் சுத்திகரிப்பு முறையை குறிக்கும். அதுகுறித்து இங்கு பார்க்கலாம் வாருங்கள்.

PREV
17
Water Bottle Cap Colors Meaning

நாம் கடைகளில் வாங்கும் குடிநீர் பாட்டில்களின் மூடிகள் நீலம், வெள்ளை, பச்சை, கருப்பு என வெவ்வேறு நிறங்களில் இருப்பதை பார்த்திருப்போம். இது வெறும் அழகுக்காகவோ அல்லது டிசைனுக்காகவோ செய்யப்படுவதில்லை. இது அந்த பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீரின் வகை, அது எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் உலகளாவிய தரக் கட்டுப்பாட்டு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

27
நீல நிறம்

இது நாம் சந்தையில் மிகவும் பரவலாக பார்க்கும் ஒரு வண்ணமாகும். இந்த பாட்டில்களில் இருப்பது சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகும். நிலத்தடி நீர் அல்லது பொது விநியோக நீர் எடுக்கப்பட்டு அது தலைகீழ் சவ்வூடு பரவல், காய்ச்சி வடித்தல் அல்லது புற ஊதாக் கதிர்கள் மூலம் அசுத்தங்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. இதில் மனித உடலுக்கு தேவையான தாதுக்கள் செயற்கையாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இதையும் படியுங்கள் -  Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!

37
வெள்ளை நிறம்

பொதுவாக காய்ச்சி வடித்த நீர் அல்லது குறிப்பிட்ட சுத்திகரிப்புக்கு உட்பட்ட நீரை குறிக்கிறது. இந்த வகையான நீரில் அசுத்தங்கள் மட்டுமின்றி இயற்கையான தாதுக்களும் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கும். இது குடிக்க பயன்படுவதை விட ஆய்வகங்கள், மருத்துவமனைகள், வாகனங்களின் பேட்டரிகள், நீராவி அயர்ன்கள் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில நிறுவனங்கள் சாதாரண குடி நீருக்கும் வெள்ளை மூடிகளை பயன்படுத்துவதுண்டு.

இதையும் படியுங்கள் -  Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

47
பச்சை நிறம்

பச்சை நிறம் இயற்கை குறிப்பதைப் போன்று இந்த பாட்டில்களில் இருப்பது இயற்கை ஊற்று நீர் ஆகும். இயற்கை மலை ஊற்றுக்கள், நிலத்தடி நீர்நிலைகள், பனிப்பாறைகளில் உருகி வரும் நீர் ஆகியவற்றிலிருந்து நேரடியாக இந்த தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. இது செயற்கையாக சுத்திகரிக்கப்படாமல் இயற்கையான முறையில் வடிகட்டப்பட்டு, உடலுக்கு நன்மை பயக்கும் மெக்னீசியம், கால்சியம் போன்ற தாதுஉப்புக்களுடன் பாட்டிலில் அடைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் -  Mutton Curry: ஆட்டுக்கறியில் இந்த பாகங்களை சாப்பிடுறீங்களா? அப்போ உங்க ஹெல்த்துக்கு ஆபத்து!

57
கருப்பு நிறம்

சமீப காலமாக பிரபலம் அடைந்து வரும் ஆல்கலைன் நீர் அல்லது கருப்பு நீர் ஆகியவற்றிற்கு கருப்பு நிற மூடி பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரின் pH அளவு சாதாரணத்தை விட அதிகமாக (8 அல்லது 9) இருக்கும். இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அதிகப்படியான தாதுக்கள் நிறைந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் நீரேற்றத்திற்காக இந்த வகை குடிநீரை பயன்படுத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள் -  Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

67
சிவப்பு நிறம்

சிவப்பு நிற மூடிகள் கொண்ட பாட்டிகளில் அடைக்கப்படும் தண்ணீர், சோடா அல்லது கார்பனேற்றப்பட்ட தண்ணீரைக் குறிக்கிறது. இதில் கார்பன் டையாக்சைடு வாயு செலுத்தப்பட்டிருக்கும். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக சற்று சுவையூட்டப்பட்ட அல்லது வாயு நிரப்பப்பட்ட தண்ணீரைக் குறிக்கும்.

இதையும் படியுங்கள் -  Chanakya Niti: இந்த குணங்கள் உள்ள மனைவி கிடைத்தால், கணவன் வாழ்க்கை சொர்க்கம்தான்!

77
முக்கிய குறிப்பு

பெரும்பாலான சர்வதேச மற்றும் முன்னணி நிறுவனங்கள் இந்த வண்ண குறியீட்டு முறையை சரியாக பின்பற்றுகின்றன. இருப்பினும் அனைத்து உள்ளூர் நிறுவனங்களும் இதை கட்டாயமாக பின்பற்றுவதில்லை. சில நேரங்களில் பிராண்டின் வடிவமைப்புக்காக வெவ்வேறு வண்ணஅதிகாரிளைப் பயன்படுத்தலாம். எனவே தண்ணீரை வாங்குவதற்கு முன்னர் பாட்டிலின் லேபிள் விவரங்களை படிப்பது மிகவும் பாதுகாப்பானது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories