
இதய நோய், பக்கவாதம் மற்றும் பலவிதமான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, தினமும் 11 நிமிடங்கள் அல்லது வாரத்துக்கு 75 நிமிடங்கள் நடைபயிற்சி போன்ற லேசான் உடற்பயிற்சிகளைச் செய்துவந்தால் போதும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில்' (British Journal of Sports Medicine) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், அந்நாட்டு தேசிய சுகாதார சேவையின் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி செயல்பாடுகளைச் செய்துவந்தால் 10 இல் ஒருவரையாவது விரைவான மரணத்தில் இருந்து தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
உடல் செயல்பாடுகள் இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். பெரியவர்கள் வாரத்துக்கு 150 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பிலோ 75 நிமிடங்கள் தீவிர உடல் உழைப்பிலோ ஈடுபடலாம் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
"எதையும் செய்யாமல் இருப்பதைவிட சில உடல் உழைப்பைக் கோரும் சில வேலைகளைச் செய்வது சிறந்தது. வாரத்தில் 75 நிமிடங்கள் இதைச் செய்யமுடியும் முடியும் என்று நீங்கள் கண்டுகொண்டால்,அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பின்னர் பரிந்துரைக்கப்பட்ட அளவை நோக்கி படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யலாம்" என்று பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எம்ஆர்சி) தொற்றுநோயியல் பிரிவின் டாக்டர் சோரன் பிரேஜ் கூறுகிறார்.
இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 2019 இல் ஆண்டுக்கு 17.9 மில்லியன் இறப்புகளுக்கும், 2017 இல் 9.6 மில்லியன் இறப்புகளுக்கும் இந்த நோய்களே காரணமாக இருந்தன.
வாரத்திற்கு எழுபத்தைந்து நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பில் ஈடுபட்டால் இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை 17 சதவீதமும் புற்றுநோய்களை 7 சதவீதமும் குறைக்க முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலையின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
சில புற்றுநோய்களைத் தவிர்ப்பதில் இந்தச் சிறிது நேர உடல் உழைப்பு நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார்கள். தலை மற்றும் கழுத்து, மைலோயிட் லுகேமியா, மைலோமா மற்றும் இரைப்பை கார்டியா புற்றுநோய்களுக்கான வாய்ப்பு 14-26 சதவீதம் வரை குறையுமாம்.
ವ್ಯಾಯಾಮವು 'ಫೀಲ್ ಗುಡ್ ಹಾರ್ಮೋನುಗಳು' ಅಥವಾ ಎಂಡಾರ್ಫಿನ್ಗಳ ಬಿಡುಗಡೆಯನ್ನು ಪ್ರಚೋದಿಸುತ್ತದೆ ಎಂದು ಅಧ್ಯಯನಗಳು ತೋರಿಸಿವೆ, ಇದು ಮನಸ್ಸನ್ನು ನಿಯಂತ್ರಣದಲ್ಲಿಡಲು ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ. ಎಂಡಾರ್ಫಿನ್ಗಳು ನೈಸರ್ಗಿಕ ನೋವು ನಿವಾರಕಗಳಾಗಿರುವುದರಿಂದ, ಈ ಸಮಯದಲ್ಲಿ ವರ್ಕೌಟ್ ಮಾಡುವುದರಿಂದ ಪೀರಿಯಡ್ಸ್ ಸಂಬಂಧಿಸಿದ ಸೆಳೆತ, ತಲೆನೋವು ಅಥವಾ ಬೆನ್ನು ನೋವು ನಿವಾರಣೆಯಾಗಬಹುದು. ವ್ಯಾಯಾಮವು ರಕ್ತ ಪರಿಚಲನೆಯನ್ನು ಹೆಚ್ಚಿಸುತ್ತದೆ.
நுரையீரல், கல்லீரல், எண்டோமெட்ரியல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படுவதை 3-11 சதவீதம் வரை குறைக்கலாம்.
আমরা যখন কোনও ব্যায়াম বা শরীরচর্চা করি তখন আমাদের শরীর থেকে ক্যালোরি বার্ন হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় যখন জিমে যাওয়া বা যোগাসন করা বন্ধ হয়ে যায় সেই সময়ও আপনি চাইলেই প্রতিদিন ৪০০ ক্যালোরি বার্ন করতে পারবেন সহজেই।
"நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் உடலுக்கு நல்லது என்பதை அறிவோம். அப்போது நமது இதயத்துடிப்புகளின் எண்ணிக்கை கூடுகிறது. ஆனால் நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், இதனால் இதய ஆரோக்கியத்திற்கு கணிசமான நன்மைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் மட்டும் நீங்கள் இதுபோன்ற எளிய உடற்பயிற்சி செய்ய முடிந்தாலும் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது." என்று எபிடெமியாலஜி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் உட்காக் சொல்கிறார்.
சுறுசுறுப்பான நடைபயிற்சி, நடனம், பைக் ஓட்டுதல், டென்னிஸ் விளையாடுதல் போன்ற செயல்பாடுகளின்போது இதயத் துடிப்பை உயர்த்தி, வேகமாக சுவாசிக்கிறோம். அது நம் இதயத்தைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுவதுடன் சீராக சுவாசிக்க நுரையீரலுக்கு துணை புரிகிறது.