Explained: உடற்பயிற்சி செய்யும்போதே நிகழும் மரணங்கள்.. மருத்துவர்கள் சொல்லும் பின்னணி என்ன?

First Published Mar 4, 2023, 11:35 AM IST

உடலை கட்டுக்கோப்பாக வைக்க துடிக்கும் இளைஞர்கள் பலர் ஜிம்மிற்கு படையெடுத்து வருகின்றனர். 

அண்மைகாலங்களில் உடற்பயிற்சி செய்யும்போதே மாராடைப்பு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கும் சம்பவங்கள் மனதை பதற்றமடைய வைத்து வருகின்றன. ஒருவர் ஆரோக்கியமாக இருக்க செய்யும் உடற்பயிற்சிகளே அவருக்கு எமனாக மாறுவது எப்படி நிகழ்கிறது என்பதை இங்கு காணலாம். 

மருத்துவர் அறிவுரை, சினிமா நடிகர்கள், நடிகைகளின் உடல் அமைப்பினால் வந்த ஈர்ப்பு சிலரை உடற்பயிற்சி செய்ய தூண்டுகிறது. அது கூட தவறில்லை..ஆனால் ஜிம்மிற்கு போனதும் உடல் கட்டமைப்பு செம்மையாக தெரியும் என நினைப்பது தான் பிரச்சனையின் ஆணிவேர். மெதுவாக உடற்பயிற்சியின் வேகத்தையும், கடினத்தன்மையும் அதிகரிக்க வேண்டும். அப்படி செய்யாமல் ஜிம்மிற்கு வந்தவுடன் அதிகமான உடற்பயிற்சியை மேற்கொள்வதை உடலால் ஏற்று கொள்ளமுடிவதில்லை. அது அவர்களுக்கு முற்றிலும் பாதிப்பை உண்டாக்கும்.

எப்போதுமே சட்டென எடைகுறைக்கவோ, எடையை அதிகப்படுத்தவோ செயற்கையான மருந்துகளை, புரதச்சத்து உணவுகளை உபயோகம் செய்வதை தவிர்க்கலாம். அவை எல்லோரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என சொல்லிவிட முடியாது.

ஜிம்முக்கு போனதும் உடனே கடின பயிற்சி செய்தால் உடலுக்கு நல்லதல்ல. உங்களுடைய வயதுக்கும், உடலுக்கும் ஏற்ற பயிற்சிகளை செய்யவேண்டும். அதற்கு நல்ல ஜிம், அதில் தகுந்த பயிற்சியாளர் இருப்பது அவசியம். அதை தெரிந்துகொள்ளுங்கள். போலிகளிடம் ஏமாற வேண்டாம்.  

இதையும் படிங்க: வாரம் இருமுறை இந்த கீரை சாப்பிட்டால்.. வாழ்க்கை முழுக்க கல்லீரல், சிறுநீரகம் பிரச்சனையே கிட்ட வராது..!

இப்போது ஏற்பட்டு வரும் மரணங்கள் நமக்கு உணர்த்துவது நாம் உடற்பயிற்சிகளை செய்யும்முன் எந்த மருத்துவ ஆலோசனைகளையும் பெறுவதில்லை. 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடற்பயிற்சியை தொடங்கும் யோசனை வந்ததும் முதலாவதாக இ.சி.சி., எக்கோ மாதிரியான இதய பரிசோதனை செய்து மருத்துவர்கள் ஆலோசனை பெறவேண்டும். இது குறித்து மருத்துவர்கள் கூறுவதை தெரிந்து கொள்ளுங்கள். 

மருத்துவர்கள் சில முக்கியமான எச்சரிக்கைகளை நமக்கு சொல்கின்றனர். ஒருவர் முறையான பயிற்சி இல்லாமல் திடீரென அதிக எடையை தூக்கினால் அவருக்கு இதய துடிப்பு அதிகமாகும். இப்படி சட்டென இதயம் அதிகமாக துடிப்பது திடீர் இதய இறப்பு (சடன் ஹார்டியாக் டெத்) உண்டாக்க வாய்ப்பை உண்டாக்கிவிடும். ஒரு சிலருக்கு வேறுமாதிரியான பிரச்சனை இருக்கும். பெமிலியல் ஹைப்பர் கொலஸ்ட்ரால் லிமியா எனும் இதய வால்வு மீது கொழுப்பு படியும் பிரச்சனை இருக்கும்.

இவர்கள் ஜிம்மில் அதிக எடையை கண்மூடித்தனமாக தூக்கும்போது உண்டாகும் அழுத்தத்தால் ரத்த குழாய் கொழுப்பு அடைப்பானது திடீரென வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஜிம்மில் போய் உடற்பயிற்சி செய்பவர்கள் முறையான பயிற்சியாளரிடம் பயிற்சி எடுப்பதும், இ.சி.சி., எக்கோ மாதிரியான இதய பரிசோதனை செய்து கொள்வதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானது. 

இதையும் படிங்க: சிலரை தொடும்போது மட்டும் கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஜிவ்னு இருக்கும்... அதுக்கு என்ன காரணம் தெரியுமா? 

click me!