வீட்டில் இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்!

First Published | Sep 20, 2024, 11:02 AM IST

Vastu Tips Tamil : வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மஞ்சள் நிறப் பொருட்களை எந்த திசையில் வைத்தால் பணம் தொடர்பான நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

Vastu Tips- Make These 4 Signs On The Main Door To Attract Prosperity

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை செழிப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உறவுகள் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் சில சமயங்களில், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நம் வாழ்க்கையில் துயரங்களும் பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளும் வாழ்வின் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மனிதனை இயற்கையோடு இணைக்கும் இணைப்பு வாஸ்து சாஸ்திரம். இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு மற்றும் வானம்ஆகியவற்றை நல்லிணக்கத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட அறிவியல் கருத்துகளை வாஸ்து சாஸ்திரம் வழங்குகிறது. இந்த இயற்கை ஆற்றல்களுக்கு இடையே சமநிலையை அடைவதே வாஸ்துவின் முதன்மையான குறிக்கோள்.

வாஸ்து வீட்டிற்குள் சமநிலையையும் அமைதியையும் ஈர்க்கிறது. வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வசதியான வாழ்க்கை சூழலை வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசைகளை அறிந்துகொள்வதன் மூலம் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியையும் செல்வத்தையும் ஈர்க்க முடியும். ஒரு வீடு நேர்மறை மற்றும் மகிழ்ச்சியின் சரியான ஒளி மற்றும் சாரத்தை வெளிப்படுத்தும் போது மட்டுமே அது ஒரு வீடாக கருதப்படும்.

To boost confidence, follow these vastu tips

மகிழ்ச்சியான வீடு என்பது நேர்மறை, சமநிலையான ஆற்றலின் விளைவாகும். இந்த ஆற்றல் சமநிலை ஒரு வீட்டின் வாழ்க்கை அறை, பிரதான கதவு, சமையலறை, பூஜை அறை, படுக்கையறை, கழிப்பறை மற்றும் பலவற்றிலிருந்து வருகிறது. நமது வீடுகள் நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான இடங்களாக இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். 

நேர்மறை ஆற்றலை ஈர்க்க உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அமைப்பது மிகவும் முக்கியம், இது நம் வாழ்வில் செழிப்பு, வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் சக்தியைக் கொண்டுள்ளது. நேர்மறை ஆற்றலை ஈர்க்க உங்கள் சுற்றுப்புறங்களை அமைப்பது மிகவும் முக்கியம். வீட்டின் பூஜையறை, படுக்கையறை, சமையலறை என அனைத்திற்கும் தனித்தனியாக வாஸ்து குறிப்புகள் உள்ளன. வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள், வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள் என அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன...

Tap to resize

அந்த வகையில் வீட்டில் மஞ்சள் நிறப் பொருட்களை சரியான திசையில் வைத்தால், அது உங்களுக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

கிழக்கு திசை

சூரியன் கிழக்கு திசையில் உதிக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சூரியனிடம் இருந்து வரும் மஞ்சள் நிறமும் சூரியக் கடவுளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அப்படி இருக்கும் போது மஞ்சள் நிற பொருட்களை கிழக்கு திசையில் வைத்து வழிபட்டால் சூரியனின் அருள் கிடைக்கும். மேலும், அவ்வாறு செய்வது வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வருகிறது என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைத்திருப்பது பணம் தொடர்பான நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஒரு போதும் பணத்திற்கு பஞ்சமே வராது என்றும் கூறப்படுகிறது.

மேற்கு திசை

மேற்கு  திசை மன அமைதிக்கும், நிதி ஆதாயத்திற்கும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மஞ்சள் நிற பொருட்களை இந்த திசையில் வைக்கும்போது, ​​​​உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுகிறது, இது குடும்ப உறுப்பினர்களுக்கு மன அமைதியைத் தருகிறது. இது தவிர, இது உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தெற்கு திசை

இந்து மதத்தில், இந்த திசை மரணத்தின் கடவுளான யம தர்மனின் திசையாக கருதப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த திசையில் வைக்கப்படும் வண்ணங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைப்பது எதிர்மறையை நீக்குகிறது மற்றும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டிற்கு செல்வமும் செழிப்பும் உண்டாகும்.

வாஸ்து சாஸ்திரத்தில் கிட்டத்தட்ட எல்லா வகையான விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நம் வாழ்வில் நிறங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்பதும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவற்றை சரியாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வண்ணத்தின் தேர்வு உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே நீங்கள் அவற்றை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Latest Videos

click me!