Vastu Tips-swami padam udainthu vittal pooja: பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து விட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஆன்மீகத்தின் அடிப்படையில், நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக சில விஷயங்களை பின்பற்றி வருகிறார்கள்..சிறு வயதில் இருந்தே நாம் அனைவரும் கட்டாயம்கேள்விப்பட்டிருப்போம். கண்ணாடி உடைந்தால், குடும்பத்தில் வீபரீதம் நடக்கும், குங்குமம் தவறினால் கணவருக்கு பிரச்சனை, ஒன்றை கையில் வளையல் அணிந்தால், மாமாவுக்கு ஆகாது. காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும். இடது கண் துடித்தால் வீட்டிற்கு நல்லது நடக்கும். போன்ற பழக்க வழக்கங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதேபோன்று, பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து விட்டால், அபசகுனம் உண்டாகுமா..? குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது தோஷம் பிடிக்குமா ..? இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா, என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
36
Vastu Tips-swami padam udainthu vittal
ஒருவேளை உங்கள் வீட்டில் இருக்கும் சுவாமி படம் உடைந்து போய் விட்டால், அதனை நினைத்து வீட்டில் இருப்பவர்கள் பதட்டப்பட வேண்டாம். சுவாமி படம் கீழே விழுந்து உடைந்ததற்கு என்ன காரணமாக இருக்குமோ என்று நிறைய கெட்டதை சிந்தித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த பிரச்சனைக்கு தீர்வினை அப்படியே சுவாமி இடம் விட்டு விடுங்கள்.
முதலில், உடைந்த சுவாமி படத்தில் இருக்கும் கண்ணாடியை பக்குவமாக நீக்கி விடுங்கள். நீரில் போட கூடாது..நீங்கள் மேலே இருக்கும் சட்டத்தையும் பக்குவமாக நீக்கி, குப்பையில் துணியால் சுற்றி போட்டு விடுங்கள். இப்போது, சுவாமியின் அட்டை மட்டும் உங்களிடம் இருக்கும். அதாவது காகிதத்தில் பதிக்கப்பட்ட சுவாமி உருவம் இருக்கும்.
56
Vastu Tips-swami padam udainthu vittal
ஒரு சுத்தமான பாக்கெட்டில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூளை கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சுவாமி படம் அச்சிடப்பட்ட காகிதத்தை போட்டு நன்றாக ஊற வைத்து அதன் பின்பு உங்கள் கையை வைத்து கரைத்தால் சுவாமி படம் அனைத்தும் தண்ணீரில் கரைந்து விடும். இந்த தண்ணீரை செடி கொடிகள் இருக்கும் இடத்தில் ஊற்றி விடலாம். இதே போல தான் செல்லரித்த நீண்ட நாள் பயன்படுத்தாத சுவாமி படங்களையும் நீங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
பின்னர், குடும்பத்துடன் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்து, தேங்காய் உடைக்க வேண்டும். கவன குறைவு காரணமாக பூஜை அறையில் சுவாமி படம் உடைந்து விட்டது. இதனால் எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் சங்கடங்கள் வருவதாக இருந்தால் கூட, அதை நீ தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனதுருகி இறைவனிடம் வேண்டி கொள்ள வேண்டும். இதை செய்தாலே போதும், உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் எந்த பிரச்சனை வருவதாக இருந்தாலும் அதை அந்த சுவாமியே பார்த்துக் கொள்ளும்.