Sani Peyarchi 2023 Palangal:
அப்படியாக, வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் சனி முறையாக மகரத்தில் இருந்து, கும்பத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மீனம் உள்ளிட்ட ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனி ஆரம்பிக்கிறது. மகரம் உள்ளிட்ட சில ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள்.அப்படியாக உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்..
Sani Peyarchi 2023 Palangal:
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி 12ம் வீட்டில் நடக்கிறது. இதனால், உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். உங்களுக்கு திடீர் வருமானம் உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் செல்லும் யோகம் வந்து சேரும்.
Sani Peyarchi 2023 Palangal:
ரிஷபம்:
சனி பகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நுழைகிறார். இந்த் நேரத்தில், நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கூட்டுப்பணிகள் இந்த காலத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த நேரம் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் சாதகமானதாக இருக்கும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.