Published : Sep 01, 2022, 09:44 AM ISTUpdated : Sep 01, 2022, 09:46 AM IST
National Nutrition Week 2022: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை காக்கும் சத்தான இயற்கை உணவு முறைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்..
ஊட்டச்சத்து குறைபாடு, அதிக ஊட்டச்சத்து ஆகிய இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் (செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்த வாரத்தை நடத்துகிறது.
குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததற்கு வறுமை மட்டுமே காரணமல்ல. இன்றைய மேற்கத்திய உணவு கலாசாரத்தில், துரித உணவு, சக்கை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
எனவே, குழந்தைகள் மட்டுமல்ல. அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட உணவில் கவனம் செலுத்த வேண்டும். சரியான உணவை உட்கொள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை காக்கும் சத்தான இயற்கை உணவு முறைகளை பற்றி நாம் இந்த நாளில் தெரிந்து வைத்து கொள்ளவோம்.
36
National Nutrition Week 2022:
புரதம் கொண்ட உணவுகள்:
சோயா பொருட்கள், டோஃபு, நட்ஸ், பால், தயிர், பனீர் சீஸ் மற்றும் பீனட் பட்டர் போன்ற புரதத்தின் தேவையை சிறப்பாக நிறைவு செய்கின்றன.
மீன், கோழி, இறைச்சிகள், முட்டை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவை இரும்புச் சத்தின் வளமான ஆதாரங்களாகும். அதேபோன்று, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது பச்சை இலை காய்கறிகளைச் சேர்ப்பது முக்கியம்.
46
National Nutrition Week 2022:
மாதுளை விதைகள்
மாதுளம் விதைகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளன. ஒரு முழு கப் மாதுளை விதையில் 130 கலோரிகள் உள்ளது. இதனை ஒரு சாலட் அல்லது முழு தானிய உணவில் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம்.
56
National Nutrition Week 2022:
ஆளி விதைகள்
ஆளி விதைகள் உங்கள் இதயத்திற்கு நல்லது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இரண்டு தேக்கரண்டி ஆளி விதை 2.8 கிராம் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைப் பெற உதவும். ஆளி விதைகள் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆளி விதைகள் இரத்த சிவப்பணுக்களின் அளவை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். மற்றுமொரு வழியாக, முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம்.
66
National Nutrition Week 2022:
பால்:
பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஸ் ஆகியவை உள்ளன. எனவே தினமும் உணவில் பால் சேர்த்து கொள்ள வேண்டும்.