Valentine's Day 2024 : இந்த 5 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை!! மீறினால் சிறை தண்டனை..

First Published Feb 12, 2024, 2:37 PM IST

காதலர் தினம் பிப்பிரவரி 14ஆம் தேதி வருகிறது. இந்நிலையில், இந்த 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? மீறினால் சட்டச் சிக்கலில் சிக்கக்கூடும். 

காதலர் தினத்தன்று, காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், உலகம் முழுவதும் இந்த 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? மீறினால் சட்டச் சிக்கலில் சிக்கக்கூடும்.  

மலேசியா: மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. காதலர் தினம் கொண்டாட இங்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

Latest Videos


சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் கூட காதலர் தினத்தை கொண்டாடினால் கைது செய்யப்படுவார்களாம். மேலும், இது இளைஞர்களிடம் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். 

ஈரான்: ஈரானில் 2010ம் ஆண்டு முதல் காதலர் தினத்தை கொண்டாட தடை உள்ளது. இங்குள்ள அரசு இதை தார்மீக சீரழிவு விழாவாக கருதுகிறது. காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பது ஈரானிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  காதலர் தினம் 2024 : இந்த 4 ராசிக்கு காதலர் தினத்தன்று காதல் துணை அமையும்!!

பாகிஸ்தான்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் காதலர் தினத்திற்கு எதிராக உள்ளது. அங்குள்ள நீதிமன்றம் இஸ்லாமியக் கல்விக்கு எதிரானதாகக் கருதுகிறது. காதலர் தினம் பாகிஸ்தானில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை. 

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்தை சிறப்பாக இருக்க.. உங்கள் ராசிக்கு ஏற்ப இந்த நிறங்களில் ஆடை அணியுங்கள்!

உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் 2012க்குப் பிறகு காதலர் தினம் தடை செய்யப்பட்டது. இங்குள்ள மக்கள் பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14 அன்று கொண்டாடுகிறார்கள். உஸ்பெகிஸ்தான் மக்கள் பாபரை தங்கள் ஹீரோவாகக் கருதுகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!