Happy Hug Day 2024 : கட்டிப்பிடிக்கிறதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

Published : Feb 12, 2024, 11:21 AM ISTUpdated : Feb 12, 2024, 11:34 AM IST

கட்டிப்பிடிப்பதன் எத்தனை வகைகள் உள்ளன. அவற்றின் அர்த்தத்தை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

PREV
16
Happy Hug Day 2024 : கட்டிப்பிடிக்கிறதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி கட்டிப்பிடிப்பு நாள். இது காதலர் வாரத்தின் ஆறாவது நாள் இந்த நாளில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அரவணைப்புகளில் வகைகள் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்களைப் பற்றிய மற்றவர்கள் உணர்வுகளை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்று அறிந்து கொள்ளலாம் வாங்க..

26

மெல்லிய கட்டியணைப்பு: இந்த அணைப்பு உங்கள் துணையுடன் நீங்கள் மிகவும் சிறப்பான உறவை கொண்டிருப்பதை காட்டுகிறது அதில் காதல் மற்றும் நம்பிக்கை அதிகம் உள்ளது. மேலும் காதலர்கள் இந்த அணைப்பின் மூலம் ஒருவருக்கொருவர், கண்களில் அன்பு நிறைந்தவர்களாக பார்க்க முடியும். இது மிகவும் நெருக்கமான போஸ் ஆகும்.

36

இறுகமான அணைப்பு: நீங்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் விட்டு செல்ல விரும்பாத போது இந்த மாதிரி அணைத்து கொள்வது நிகழ்கிறது. இந்த அணைப்பில் உங்கள் துணையும் நீங்களும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி கட்டிபிடிப்பது நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

இதையும் படிங்க:  கணவன் மனைவி கட்டிபுடிச்சு தூங்கினா இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? - ஆச்சர்யப்பட வைக்கும் ஆய்வின் முடிவுகள்!

46

தோல் அணைப்பு: இதில், உங்கள் துணை உங்கள் தோளில் தலையை வைத்து உங்களை கட்டிபிடிப்பார். இப்படி உங்கள் துணை உங்கள் கட்டிப்பிடித்தால் அந்த உறவில் காதல் அதிகம் என்று அர்த்தம்.  வேறு விதமாக கூறினால் இது ஒரு முறையான தழுவல். மேலும், இந்த வகை அணைப்பில் தழுவும் போது முகத்தில் மெல்லிய புன்னகை இருக்கும்.

இதையும் படிங்க:  கட்டிப்புடி வைத்தியம் உண்மையிலே ஒர்க் அவுட் ஆகுமா? Hugs தரும் நன்மைகள் என்ன? ஒரு பார்வை!

56

பின் அணைப்பு: இதில் ஒருவர் மற்றவரின் பின்னாலிருந்து அணைத்துக் கொள்கிறார். உங்கள் துணை உங்களை மீண்டும் இந்த மாதிரி கட்டிப்பிடித்தால் அவர் உங்களை நீண்ட காலமாக இழக்கிறார் என்று அர்த்தம். அதுபோல் உங்கள் துணை எப்போதும் உங்களை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தால் அவர் எப்போதும் உங்கள் அன்பை உணர விரும்புகிறார். மேலும் தம்பதிகள் உடல் ரீதியாக நெருக்கமாகவும், பாதுகாப்பாகவும் பாராட்டப்பட இந்த மாதிரி செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

பக்கவாட்டு அணைப்பு: இந்த அணைப்பு ஒருவருக்கொருவர் இடுப்பு அல்லது தோள்படையில் கைகளை வைத்து கொள்கிறார்கள். இது அவர்கள் நிற்கும் போது அல்லது உட்கார்ந்து இருக்கும்போது இப்படி செய்கிறார்கள். பொதுவாகவே, இந்த அணைப்பு 'நாம் நண்பர்கள்' என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. 

இந்த முறைகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் துணையின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories