சமையலறையில் இருக்கும் டிராயர் சுத்தம் செய்ய :
சமையலறையில் இருக்கும் ட்ராயரை அவ்வப்போது சுத்தம் செய்யாவிட்டால் தூசிகள், அழுக்குகள், கிரீஸ், மசாலாக்கள் குவிந்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அலுமினியத்தாளை அதில் ஒட்டி வைத்தால், மாதம் ஒருமுறை மட்டும் சுத்தம் செய்தால் போதும். அதுவும் சுலபமாக.
சமையலறை ஜன்னல் மற்றும் கதவுகள் சுத்தம் செய்ய : சில வீடுகளில் சமையலறையில் இருக்கும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பிசுபிசுப்பாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிசுபிசுமாகும் இடத்தில் அலுமினியத்தாளை ஒட்டி வைத்தால் போதும். இனி அவை பிசுபிசுப்பாக இருக்காது.
மசாலா டப்பாக்களை சுத்தம் செய்ய : உங்கள் வீட்டில் இருக்கும் மசாலா பிளாஸ்டிக் ஸ்டீல் டப்பாக்கள் எளிதில் பிசுபிசுப்பாகிவிடும், தூசிகளும் தங்கிவிடும். இத்தகைய சூழ்நிலையில், அந்த டப்பாக்களில் அலுமினியத்தாள் கொண்டு சுற்றி வைத்தால் அவை பிசுபிசுப்பாக இருக்காது, அழுக்கும் தங்காது. குறிப்பாக, அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் வராது.