வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

First Published | Sep 24, 2022, 1:47 PM IST

karpooram veetu kurippu: உங்களுக்கே தெரியாத கற்பூரம் பற்றிய பல அறிய பயனுள்ள தகவல்கள் இந்த குறிப்பில் இருக்கிறது.  அவற்றை படித்து நீங்கள் பலன் பெறலாம். 

நம்முடைய வீடுகளில் கற்பூரத்தை வீடுகளில் பூஜை செய்வதற்கும், கோவில்களில் பூஜை செய்வதற்கும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், இந்த வெறும்1 ரூபாய் கற்பூரத்தை இனிமேல் இப்படி பயன்படுத்தி பாருங்கள். இதனால் உங்களின் காசும் மிச்சம் ஆகும். வீடு முழுவதும் நறுமணம் இருக்கும். அத்துடன் சிலந்தி வலை, கரப்பான் பூச்சி, வண்டு போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் தன்மை கொண்டது. எனவே, இதுவரை நீங்கள் பயன்படுத்தாத, நம்பமுடியாத, உங்களுக்கே தெரியாத கற்பூரம் பற்றிய பல அறிய விஷயங்கள் இந்த குறிப்பில் இருக்கிறது.  அவற்றை படித்து நீங்கள் பலன் பெறலாம். 

டிப்ஸ் 1:

அதற்கு முதலில் நீங்கள், வெறும் 1 ரூபாய் சிறிய அளவிலான கற்பூரத்தை எடுத்து பவுடர் செய்து வைத்து கொள்ளுங்கள். அதில், ஒரு டீஸ்பூன்அளவு நெய் கலந்து அப்படியே சிறிது நேரம் குழைத்தால் தைலம் போல் வரும். இதை தலைவலி வரும் நேரங்களில் தேய்த்து பாருங்கள். உடனே தலைவலி சரியாகிவிடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதனால் எந்த விதமான பாதிப்பும் உடலில் ஏற்படாது. நீங்கள் கடைகளில் காசு கொடுத்து வாங்கி, பயன்படுத்தும் மருந்துகளை விட இந்த கற்பூரம் நல்ல பலன் தரும்.

Tap to resize

டிப்ஸ் 2:

இரண்டாவது இந்த கற்பூரத்தை பவுடராக்கி ஒரு மஞ்சள் துணியில் கட்டி, உங்கள் அரிசி முட்டையில் போட்டு விட்டால் போதும் வண்டு வராது. அரிசி மங்கும் வாடையும் வராது. அத்துடன், இதன் தெய்வீக சக்தியால் அன்னபூரணி அம்மா எப்போதும் உங்களுக்கு படி அளப்பவளாக இருப்பாள். இதன் மகிமையால் நீங்கள், தினமும் 10 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவிற்கு வசதியில் உயர்த்தப்படுவீர்கள். 

 மேலும் படிக்க....Vastu tips: தூங்கும் போது ஏன் தவறான திசையில் தலை வைக்க கூடாது, வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்க சிறந்த திசை எது

டிப்ஸ் 3:

கற்பூர பவுடர் கலந்த தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து அதை ஒட்டடை குச்சியின் பின்புறம் கட்டி விடுங்கள். பிறகு உங்கள் வீட்டில் எந்த மூலைகளில் ஒட்டடை அதிகம் சேருமோ, அங்கெல்லாம் இந்த துணியை வைத்து துடைத்து விடுங்கள். இந்த கற்பூர வாடைக்கு சீக்கிரத்தில் ஒட்டடை அண்டவே அண்டாது. வீடு முழுவதும் நறுமணமாக இருக்கும். சிலந்தி பூச்சிகள் வருவதும் குறையும். இதன் வாடைக்கு கரப்பான் பூச்சிகள் வரவே வராது. 


டிப்ஸ் 4:

கற்பூரத்தை பவுடராக்கி ஒரு மஞ்சள் துணியில் கட்டி, உங்கள் துணிகளுக்கிடையே பீரோவில் வைத்தால் துணியுடன் சேர்ந்து பீரோவும் மணம் வீசும். கரப்பான், பல்லி, பாச்சாலை போன்ற பூச்சிகளும் வரவே வராது. 

 மேலும் படிக்க....Vastu tips: தூங்கும் போது ஏன் தவறான திசையில் தலை வைக்க கூடாது, வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்க சிறந்த திசை எது

டிப்ஸ் 5:

கற்பூரத்தை ஒரு பாட்டில் தண்ணீரில் கலந்து ரூம் ஸ்பிரே போல் ஆங்காங்கே அடித்துவிட்டால், ஈ, கொசு போன்றவை வரவே வராது. இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்தால் அதனை பயன்படுத்தி பாருங்கள். 

டிப்ஸ் 6:

ஒரு பிளாஸ்டிக் கப்பில் சிறிதளவு கற்பூரம், ஒரு சிட்டிகை ஜவ்வாதும், கலந்து தண்ணீர் ஊற்றி அடுப்பறையில் வைத்து விட்டால், உங்கள் சமையல் அறை முழுவதும் எப்போதும் வசமாக இருக்கும். 

 மேலும் படிக்க....Vastu tips: தூங்கும் போது ஏன் தவறான திசையில் தலை வைக்க கூடாது, வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்க சிறந்த திசை எது

டிப்ஸ் 4:

தீபம் எரியும் போது இந்த கற்பூர பவுடரை சிறிது அந்த எண்ணெய்யிலோ, நெய்யிலோ கலந்தால் போதும். வாசமும் நன்றாக இருக்கும். இந்த வாசத்திற்கு வீட்டில் கொசுக்களும் அண்டாது.

Latest Videos

click me!