Navratri
செப்டம்பர் 26 ஆம் தேதி கலசம் வைக்க சிறந்த நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போல இந்த நாளில் துர்கா தேவி யானை மீது பயணிக்கிறார். ஜோதிடத்தின் படி, இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு துர்கா தேவி சிறப்பான அருளை தர இருக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Navratri
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். உத்தியோகத்தில் விரிவாக்கம், இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம். துர்க்கை அம்மனின் அருளால் செல்வம் பெருகும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். பயணம் வெற்றியடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.